“மட்ட” பாட்டுக்கு விஜய்யுடன் குத்தாட்டம் போட்ட திரிஷா வாங்கிய சம்பளம் – எவ்வளவு தெரியுமா?

Author:
7 September 2024, 11:18 am

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ் (கோட்) திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி உலகம் முழுக்க ரிலீஸ் ஆகியுள்ளது. இப்படத்தை விஜய் ரசிகர்கள் தியேட்டரில் சென்று பார்த்து திருவிழா போல் கொண்டாடி வருகிறார்கள்.

vijay trisha dance

பெரும்பாலும் விஜய்யின் திரைப்படங்களில் குத்து பாடல்களுக்கு பிரபலமான நடிகைகள் வந்து அவருடன் குத்தாட்டம் போடுவது வழக்கமான ஒன்றாக பார்க்கப்பட்டு வருகிறது. ஆம்,முன்னதாக “உன் தங்க நிறத்துக்கு தான் தமிழ்நாட்டை எழுதி தரட்டுமா” என்ற பாடலுக்கு நடிகை ரோஜா குத்தாட்டம் போட்டு இருப்பார்.

அதேபோல் ஷாஜகான் படத்தில் வரும் “சரக்கு வச்சிருக்கேன்” பாடலில் நடிகை மீனா குத்தாட்டம் போட்டு இருப்பார். தொடர்ந்து “ஆல் தோட்ட பூபதி” பாடலில் நடிகை சிம்ரன் விஜய்க்கு ஈடு கொடுத்து பயங்கரமாக ஆடி இருப்பார். அதேபோல் திருமலை திரைப்படத்தில் “ஜக்கம்மாவாக” நடிகை கிரண் அதிரடி ஆட்டம் ஆடியிருப்பர்.

மேலும் சிவகாசி திரைப்படத்தில் நடிகை நயன்தாரா “கோடம்பாக்கம் ஏரியா” பாடலுக்கு கவர்ச்சி குத்தாட்டம் போட்டு இருப்பார். இப்படியாக தொடர்ந்து விஜய் திரைப்படங்களில் குத்து பாடல்களில் கட்டாயம் ஒரு பிரபலமான ஹீரோயின் நடனமாடி விடுவார்கள்.

அந்த வகையில் கோட் திரைப்படத்தில் நடிகை திரிஷா விஜய்யுடன் சேர்ந்து மரண குத்து டான்ஸ் ஆடியுள்ளார். இந்நிலையில் இந்த பாடலுக்கு குத்தாட்டம் போட திரிஷா வாங்கிய விவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ஒரு படத்தில் கதாநாயகியாக நடிக்க ரூ. 10 முதல் ரூ. 12 கோடி வரை சம்பளம் வாங்கும் திரிஷா ஒரே ஒரு பாடலுக்கு நடனமாட ரூ. 5 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளாராம். ஆனால், இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!