TRP-யில் ரஜினி தர்பார் படத்தை முந்திய விஜய் ஆண்டனி படம் !
27 August 2020, 3:24 pmஊரடங்கு காரணமாக அனைத்து விதமான தொழில்களும் பாதித்துள்ளன. சினிமாத்துறையை பொறுத்தவரை திரையரங்குகள் மூன்று மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டுள்ளன. சினிமா,சீரியல் என்று அனைத்து விதமான ஷூட்டிங்குகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதனால் மக்களுக்கு பொழுது போக முடியாமல் டிவியில் போடும் எல்லா படங்களையும் பார்த்து விசிலடித்து மகிழ்கின்றனர்.
இந்தநிலையில், அதிகம் மக்களால் பார்க்கப்பட்ட தொடர்கள் மற்றும் படங்களின் லிஸ்டை BARC நிறுவனம் வாராவாரம் வெளியிட்டு வந்தனர்.கடந்த வாரத்திற்கான லிஸ்டை BARC தற்போது வெளியிட்டுள்ளது. அதில் விஜய் ஆண்டனி நடித்த திமிரு பிடித்தவன் படம் 1.22 கோடி பார்வையாளர்களுடன் முதலிடத்தை பிடித்துள்ளது. இதனை தொடர்ந்து ஒளிபரப்பான ரஜினியின் தர்பார் திரைப்படம் 90.92 லட்சம் பார்வையாளர்களுடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.