பாத்து ரொம்ப இழுக்காதீங்க கையோட வந்துடப்போகுது… “Tug of War” விளையாடும் சமந்தா!!!

Author: kavin kumar
20 October 2021, 4:01 pm
Samantha
Quick Share

நடிகை சமந்தா மாஸ்கோவின் காவேரி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் . பாணா காத்தாடி, நீதானே என் பொன்வசந்தம், நான் ஈ , என தொடங்கி இன்றுவரை பலபடங்களில் நடித்து இன்றளவும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு படங்களிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். இந்நிலையில், தற்போது சமந்தா, விஜய்சேதுபதி , நயன்தாராவுடன் இணைந்து நடிக்கும் படம்  , “காத்துவாக்குல ரெண்டு காதல்”  விக்னேஷ் சிவன்  இயக்கத்தில் வெளிவர உள்ள இந்த திரைப்படத்தின்  படப்பிடிப்பு அண்மையில் தொடங்கின.

நடிகை சமந்தா  2017 ஆம் ஆண்டு பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா மகன் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் நடிகை சமந்தா தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வந்தார் . இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது பெயரை ” S ” என மாற்றினார்.

 நாகசைதன்யாவுடன் சமந்தா விவகாரத்து செய்ய போவதாக  வதந்திகளும் பரவியது. இதுகுறித்து சமந்தா விளக்கம் அளிக்காமல் இருந்தது மேற்கொண்டு பல சர்ச்சைகளுக்கு இடம் கொடுத்தது. அவற்றிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகை சமந்தா சமீபத்தில்  தனது காதல் கணவரை கருத்து வேறு பாடு காரணமாக இருவரும் பிரியப்போவதாக “சோசியல் மீடியாவில்’ பதிவிட்டார் . இதனைத்தொடர்ந்து நாக சைதன்யாவும்  நாங்கள் இருவரும் பிரியப்போவதை ஒப்புக்கொண்டார் . இதனால் சமந்தா , நாக சைதன்யா ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். திருமணவாழ்கையிலிருந்து  நாங்கள் பிரிந்தாலும் எங்களுடைய  நட்பு இறுதிவரை தொடரும் என்று இருவரும் கூறியிருந்தனர் . 

சமந்தா சோசியல் மீடியாவில்  மிகவும் ஆக்டிவ்வாக இருப்பவர் . அடிக்கடி மாடலிங் போட்டோஷூட்களையும் , தனது ஒர்கவுட்  போட்டோஸ் மற்றும் வீடியோக்களை பதிவிடுவது வழக்கமாக  வைத்திருப்பார் .  அந்த வகையில் நடிகை சமந்தா நேற்று முன்தினம் தனது  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நண்பர்களுடன்  (tug  of War ) கயிறு இழுக்கும்  போட்டியை விளையாடி அதனை வீடியோ பதிவாக வெளியிட்டுள்ளார் . பார்ப்பதற்கும் சுட்டி தனமாகவும் , நகைச்சுவையாகவும் இருக்கும் இந்த வீடியோ பதிவு ரசிகர்களிடையே அதிக லைக்குகளை பெற்று வருகிறது .

Views: - 394

3

1