தவெக புகழ் பாடும் டூரிஸ்ட் ஃபேமிலி? போகிற போக்கில் ஆதரவை தூவிவிட்ட இயக்குனர்?
Author: Prasad3 May 2025, 3:52 pm
அமோக ஆதரவு
சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. மனிதமே மானுட நீதி என்ற கருத்தை முன் வைத்துள்ள இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஒரு ஃபீல் குட் திரைப்படமாக மனதில் நிலைத்துள்ளது.

சசிகுமாரின் யதார்த்த நடிப்பும் அவர் சம்பந்தப்பட்ட எமோஷனல் காட்சிகளும் மனதை உருகவைப்பது போல் இருந்தது. குறிப்பாக சசிகுமாரின் இளைய மகனாக நடித்திருந்த கமலேஷ் என்ற சிறுவனின் ஆங்காங்கே ரசிக்கவைக்கும் நகைச்சுவைகள் திரையரங்குகளில் சிரிப்பலையை ஏற்படுத்துகின்றன. கமலேஷ் ஏற்று நடித்திருந்த முள்ளி என்ற கதாபாத்திரத்தை விஜய் ரசிகனாக வடிவமைத்திருந்தார் இயக்குனர் அபிஷன் ஜீவிந்த்.
தவெக பாடல்!
இந்த நிலையில் இத்திரைப்படத்தில் சிறுவன் கமலேஷ் பள்ளிக்குச் செல்லும்போது தவெக பாடலை பாடுவது போன்ற ஒரு காட்சி அமைந்துள்ளது. அதே போல் இன்னொரு காட்சியில் “தெறி” படத்தில் இடம்பெற்ற ஒரு வசனத்தை கமலேஷ் பேசுவதாகவும் இடம்பெற்றிருந்தது.

அந்த வகையில் இத்திரைப்படத்தின் இயக்குனர் விஜய் ரசிகராக இருக்கக்கூடும் என்று இணையத்தில் விஜய் ரசிகர்கள் பலரும் அவதானித்து வருகின்றனர். மேலும் தவெக தொண்டர்களிடையே இத்திரைப்படத்தில் இடம்பெற்ற காட்சிகள் பேசுப்பொருளாகியும் உள்ளது.
