ஊதுற ஊதுற ஊதுறோம்னா… பெண்மணியால் சிரிப்பை அடக்கிக் கொண்டு பார்த்த விஜய் வைரலாகும் வீடியோ..!

Author: Vignesh
28 June 2024, 5:43 pm

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருக்கக்கூடிய விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை கடந்த ஆண்டு ஆரம்பித்தார். தன்னுடைய கட்சியை ஆரம்பித்ததும், பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை ஊக்குவிக்கும் வண்ணம் பரிசுத்தொகைகளை வழங்கி கௌரவித்து வருகிறார்.

vijay

இந்த ஆண்டும் அதேபோல 10 மற்றும் 12ஆம் வகுப்பில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. திருவான்மியூரில், இருக்கும் ஒரு மண்டபத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வந்த மாணவர்களுக்கு விருது வழங்கினார் விஜய்.

vijay

இந்நிகழ்ச்சியில், கலந்து கொண்ட பெண்மணி ஒருவர் விஜய்யை வாழ்த்தி வாங்கண்ணா வணக்கங்கண்ணா என்ற தலைவா படத்தின் பாடலை பாடியுள்ளார். அவரின், பாட்டைக் கேட்டு விஜய் சிரிப்பை அடக்கிக்கொண்டு அவர் பாடலை பார்த்துக் கொண்டிருந்தார். விஜய்யின் இந்த ரியாக்சன் தான் தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

  • surya sethupathi shared his weight loss experience for phoenix movie ஒரே வருடத்தில் 60 கிலோ Weight Loss? சூர்யா சேதுபதியின் மிரளவைக்கும் உடற்பயிற்சி அனுபவங்கள்!