நிஷாவை வறுத்தெடுத்த சிடுமூஞ்சி Maxx அனிதா – நெட்டிசன்கள் பாராட்டு !

Author: Udayaraman
10 December 2020, 4:21 pm
Quick Share

பிக்பாஸ் வீட்டில் “Love Bed Gang” இந்த வாரம் சுவாரஸ்யம் குறைவாக செயல்பட்டவர்கள் லிஸ்டில் ஆரி மற்றும் அனிதாவை லவ் பெட் குரூப்பினர்கள் தேர்வு செய்துள்ளார்கள். காண்டு ஆன அனிதா, ” Bossy Robo, Puppet Robo என எல்லாரும் தனித்தனியா பேரை வச்சுட்டு,

இப்ப அனிதா அந்த பேரயெல்லாம் சொல்லுவாங்கன்னு சொல்றது எனக்கு கோர்த்து விட்ர மாதிரி ஒரு உணர்வு ஏற்படுகிறது” என்று நெற்றிப்பொட்டில் அடித்தாற்போல அவர்கள் திட்டத்தை உடைத்தார். இதை கேட்டு நிஷா, ரியோ மட்டும் பொங்கி எழுகிறார்கள்.

“பேர் வைக்க வேண்டும் என்ற ஐடியா நீங்க தான் கொடுத்தீர்கள்” என்று நிஷா, ரியோவை பார்த்து அனிதா கூறுவதை கேட்ட நிஷா,” நானா Bossy, Puppet-னு பேரு வெச்சேன்?” என்று நிஷா கேட்க, அப்படியென்றால் இந்த கான்செப்ட் வேண்டாம் என்று நீங்கள் சொல்லி இருக்கலாம்ல,

கான்செப்ட் வேண்டாம் என்று சொல்லியும் நீங்களும் சேர்ந்து ஏன் பெயர் வைக்கின்றீர்கள்” என்று ஒரு ஒரு நெத்தியடி கேள்வியை அனிதா கேட்க அதற்கு நிஷாவிடம் முழிக்கிறார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் அனிதாவை பாராட்டி வருகிறார்கள்.

Views: - 54

0

0