அப்போ விஜய்! இப்போ தல: வலிமைக்கு குறி வைத்த அமேசான் பிரைம் வீடியோ!

24 February 2021, 9:50 pm
Quick Share

அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை படத்திற்கு அமேசான் பிரைம் வீடியோ குறி வைத்துள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.

நேர்கொண்ட பார்வை படத்தின் சூப்பர் ஹிட் வெற்றியைத் தொடர்ந்து அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் வலிமை. இந்தப் படத்தை ஹெச் வினோத் இயக்கியுள்ளார். போனி கபூர் இந்தப் படத்தை தயாரித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். வலிமை பட த்தில் அஜித்துடன் இணைந்து ஹூமா குரேஸி, கார்த்திகேயா கும்மகோண்டா, துருவன், பவல் நவகீதன், யோகி பாபு, சுமித்ரா, குக் வித் கோமாளி புகழ், ராஜ் அய்யப்பா, அஜ்யுத் குமார், குர்பாணி ஜஜ் ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.

வலிமை படத்தின் அனைத்து காட்சிகளும் படமாக்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது. ஆனால், இன்னும், ஒரு முக்கியமான பைக் சண்டைக் காட்சி மட்டுமே எடுக்கப்பட உள்ளது. அதுவும், ஸ்பெயின் நாட்டில் தான் அந்த சண்டைக்காட்சி படமாக்கப்பட இருக்கிறது. இந்தப் படத்தில் அஜித்துக்கு ஒரு குத்துப் பாடலும் ரெடியாக இருக்கிறது என்று ஏற்கனவே தகவல் வெளியானது. இந்த நிலையில், மாஸ்டர் பட த்தைப் போன்று அஜித்தின் வலிமை படமும் ஓடிடி தளமான அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.

வலிமை படத்தின் டிஜிட்டல் உரிமையை அமேசான் பிரைம் வீடியோ நிறுவனம் வாங்குவதற்கு பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல் தெரிவிக்கின்றது. அஜித்துக்கு தமிழகத்தில் குறிப்பாக மதுரையில் அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். ஆதலால், வலிமை படம் முதலில் திரைக்கு வருவதற்கு முன்னதாகவே அமேசான் பிரைம் வீடியோவில் வெளியிட அந்நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இதே போன்று தயாரிப்பாளர் போனி கபூருக்கு இரண்டு ஆஃபர்கள் வந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி வருகிறது.

எனினும், இது குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவரவில்லை. வலிமை படம் எப்போது திரைக்கு வரும் என்பது குறித்து எந்த தகவலும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அப்படியிருக்கும் போது வலிமை படம் ஓடிடி தளத்தில் வெளியாகுமா? அல்லது திரையில் வெளிவருமா? என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

Views: - 1365

4

0