துணிவு VS வாரிசு… எந்தப் படம் அதிக திரையரங்குகளில் வெளியாகிறது தெரியுமா..? உதயநிதி ஸ்டாலின் சொன்ன முக்கிய அப்டேட்!!
Author: Vignesh9 November 2022, 10:45 am
அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘துணிவு’ படத்தின் ரிலீசுக்காக வெறித்தனமாக காத்திருக்கின்றனர் ரசிகர்கள். இந்தப்படத்தின் இறுதிக்கட்ட பணிகளும் தீயாக நடைபெற்று வருகிறது. இவர் படமும், விஜய்யின் ‘வாரிசு’ படமும் ஒரே நாளில் வெளியாகவுள்ளது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது. இந்நிலையில் இந்தப்படத்தின் ரிலீஸ் குறித்து உதயநிதி ஸ்டாலின் அளித்துள்ள பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.
‘துணிவு’ படத்தில் மூன்றாவது முறையாக வினோத், போனி கபூர், அஜித் மூவரும் இணைந்துள்ளனர். இதன் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தை பொங்கல் வெளியீடாக ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளது படக்குழு. உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தான் துணிவு படத்தின் வெளியீட்டு உரிமையை கைப்பற்றியுள்ளது.
அதே போல் ‘பீஸ்ட்’ படத்தினை தொடர்ந்து ‘வாரிசு’ படத்தில் நடித்துள்ளார் விஜய். வம்சி பைடிபல்லி இயக்கியுள்ள இந்தப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத் குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர். அண்மையில் வெளியான ரஞ்சிதமே பாடல் சூப்பர் ஹிட்டாகியுள்ளது.
இந்தப்படமும் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. விஜய், அஜித் படங்கள் ஒரே நாளில் வெளியாகவுள்ளது இப்போதே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது. ‘துணிவு’ படத்தின் வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதனால் ‘வாரிசு’ படத்தினை விட இந்தப்படத்திற்கு தான் அதிக தியேட்டர் ஒதுக்கப்படும் என்று இணையத்தில் செய்திகள் வெளியாகி வந்தது.
இந்நிலையில் தற்போது அளித்துள்ள பேட்டியில் உதயநிதி ஸ்டாலின் பேசும் போது, சில முறை அஜித் சார், விஜய் சார் படங்கள் ஒன்றாக ரிலீஸ் ஆகியுள்ளன. துணிவு மற்றும் வாரிசு படங்களுக்கும் சமமான தியேட்டர்கள், ஸ்க்ரீன்கள் தான் ஒதுக்கப்படும். துணிவு படத்தின் தியேட்டர் மற்றும் சாட்டிலைட் உரிமம் தொடர்பான வர்த்தகம் 4 மாதங்களுக்கு முன்பே முடிந்து விட்டது என்று தெரிவித்துள்ளார். அவரின் இந்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.
" We closed #Thunivu TN Theatrical and Satellite deals few months back.. "
— Ramesh Bala (@rameshlaus) November 8, 2022
: @Udhaystalin of @RedGiantMovies_
1
0