நடிப்பை விட அது மட்டும் தான் எல்லாம் ..! உலகத்தை புரிந்து கொண்டாரா உலக நாயகன்.?

Author: Rajesh
31 January 2022, 1:47 pm
Quick Share

நடிகர், திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குநர், கதை-திரைக்கதை ஆசிரியர், பின்னணிப் பாடகர், தொலைக்காட்சித் தொகுப்பாளர், இலக்கியவாதி, அரசியல்வாதி எனப் பன்முகத் திறமைகொண்டவர் தான் நடிகர் கமல்ஹாசன்.ஆரம்ப காலத்தில் நடிகர் கமலஹாசன், தான் நடிக்கும் படங்கள் வெற்றியடையுதோ..? தோல்வி அடையுதோ..? தனது திறமையை மட்டுமே வெளிப்படுத்துவார். அந்த வகையில் அவர் விரும்பும் கலையை மதிப்பவர் என்று பலரும் சொல்வதை கேட்டிருப்போம். அதனால தான் என்னவோ அவரை உலகநாயகன் என்று பெயரை பெற்றுத் தந்தது.

vikram_movie_kamalHaasan

ஆனால், கடந்த சில வருடங்களாகவே, அவரது நடவடிக்கையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவே சொல்லப்படுகிறது. அதாவது, சினிமாவைத்தாண்டி, விளம்பரங்கள், டிவி நிகழ்ச்சியில் தொகுப்பாளர் நிகழ்ச்சிகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இதுவரை நடிப்பை தன் உயிர் கலையாக பார்த்து வந்த கமல், தற்போது வியாபார நோக்கத்துடன் பார்த்து வருவதாகவே கூறப்படுகிறது.மேலும், அவர், அரசியலில் ஈடுபடத்தொடங்கியதில் இருந்து, அவரின் கவனம் அனைத்து பணம் ஈட்டுவதில் தான் இருக்கிறது என்றும் அதன் மூலம் தற்போது அதிகளவில் லாபம் பார்த்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. இதனிடையே தனியார் தொலைக்காட்சியில் வெளியாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருவதன் மூலம், பெரிய தொகை கிடைத்து வருவதாகவும் தெரிகிறது.

மேலும், சினிமா படங்களில் தன்னை ஒரு பொருட்டாக மதிக்காமல் நடித்து வந்த சிவகார்த்திகேயனையே, தான் தயாரிக்கும் படத்தில் நடிக்க வைக்க முன் வந்தது பலரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தியது. தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறிய சிவகார்த்திகேயனுக்கு வலை விரித்தது, அவரின் வியாபார யுக்த்தியை காட்டுவதாகவே தெரிகிறது. அது மட்டுமின்றி ஆடை ஏற்றுமதி நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

MNM Kamal - Updatenews360

மேலும், தனது பழைய படங்களில் சிறந்த படங்களின் ரீமேக் உரிமையையும் கைவசம் வைத்துள்ளாராம் கமல். இவரின் இந்த நடிவடிக்கைக்கு என்ன காரணம் என்று இதுவரை தெரியவில்லை, ஆனால் அடுத்து வரும் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும் என்றால் பணம் தேவைப்படுகிறது. அதனால் தான் இப்படி பணம் சம்பாதித்து வருகிறாரா என்றும் இந்த உலகத்தில் பணத்திற்கு தான் மதிப்பு, நடிப்பிற்கு அல்ல என்று புரிந்து கொண்டார் என்றும் சொல்லப்படுகிறது. எது எப்படியோ. அவரின் திறமைகள் காலத்திற்கு அழியாதவை என்பது மட்டும் நிதர்சனமான உண்மை.

Views: - 604

4

0