20 வயதில் நிறைவேறாத ஆசை.. 46 வயதில் சிம்ரனுக்கு அடித்த யோகம் : பிரபல நடிகருடன் ஜோடியாகிறார்!!

Author: Udayachandran RadhaKrishnan
7 December 2022, 2:29 pm

தமிழ் சினிமா உலகில் தனக்கென் தனி இடத்தை பிடித்து 25 வருடங்களாக கொடிகட்டி பறந்தவர் நடிகை சிம்ரன்.

90ஸ்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்த சிம்ரன் அனைத்து நடிகர்களுடன் நடித்துள்ளார். ஆனால் அந்த ஒரு நடிகருடன் மட்டும் நடிக்கவே இல்லை.

பல ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமா ரசிகர்களிடம் நவரச நாயகன் என்ற பட்டத்தை பெற்றவர் கார்த்திக். அலைகள் ஓய்வதில்லை முதல் அனேகன் வரை பல படங்களில் நடித்தவர்.

அப்போதே அனைத்து ஹீரோயின்களுடன் நடித்தவர். தற்போது சிம்ரன் இவருடன் இணையஉள்ளார். 20 வயதில் இருக்கும்போதே கார்த்திக்குடன் நடிக்க ஆசைப்பட்ட சிம்ரனுக்கு அந்த வாய்ப்பு அமையவில்லை.

தற்போது 46 வயதில் சிம்ரன், நடிகர் கார்த்திக்குடன் ஜோடி சேர உள்ளார். பிரசாந்த் நடிக்கும் அந்தகன் படத்தில் இந்த ஜோடிகள் இணைய உள்ளது.

  • ssmb29 movie digital rights bagged by netflix அறிவிப்பு வெளிவருவதற்கு முன்பே ஓடிடியில் விற்பனையான ராஜமௌலி திரைப்படம்? என்னப்பா சொல்றீங்க!