கனகாவை உருகி உருகி காதலித்த நபர்..- இப்போ வருத்தப்பட்டு என்ன பண்றது.. பிரபலம் உடைத்த உண்மை..!
Author: Vignesh3 May 2023, 3:30 pm
சினிமாவில் கொடிக்கட்டி பறந்த பிரபலங்கள் பின்னர் எந்த தகவலும் இல்லாமல் குடும்ப வாழ்க்கையில் உள்ளவர்கள் எத்தனையோ பேர் உள்ளனர்.
ஆனால் பெற்றோர்களும் இல்லாமல், குடும்பமும் இல்லாமல் தன்னந்தனிமையில் வாழ்ந்து வருபவர் நடிகை கனகா.
தமிழ் சினிமா உலகில் 80, 90 காலகட்டங்களில் சினிமா மத்தியில் பிரபலமாக இருந்தவர் நடிகை கனகா. இவர் ரஜினிகாந்த், பிரபு, கார்த்திக், மோகன்லால், மம்முட்டி, ஜெயராம் போன்ற பல முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்துள்ளார்.
இவர் 2007 ஆம் ஆண்டு கலிபோர்னியாவை சேர்ந்த பொறியாளர் முத்துக் குமார் என்பவரை யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொண்டார்.
பின்னர் திருமணம் முடிந்து 15 நாட்களிலேயே முத்துக்குமாரை காணவில்லை. மேலும், இவருடைய திருமண வாழ்க்கை பற்றி இன்று வரை தெரியவில்லை.
முன்னர் நடிகை கனகா பேசிய வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் வைரலாகி வந்தது. அந்த வீடியோவில் பேசிய நடிகை கனகா , எனக்கு தற்போது படத்தில் நடிக்க ஆசை வந்துள்ளது.
ஆனால், எனக்கு இப்போது 50 வயது கிட்ட ஆக இருப்பதால் நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறியதற்கு பலர் ஆறுதலாக நம்பிக்கையூட்டும் வகையில் பேசியிருந்தனர்.
சொத்து விவகாரத்தில் அப்பாவுடன் பிரச்சனை, கை கூடாத காதல், கை விட்ட கணவர், பல வருடங்கள் வீட்டை விட்டு வெளியில் வராமல் தனிமை வாழ்கை என பல துயரங்களை சந்தித்துள்ளார் நடிகை கனகா.
இதனிடையே, புற்று நோயால் பாதிக்கப்பட்டு கனகா இறந்து விட்டதாக பல வதந்திகள் வந்தபடியாக இருந்தன. ஆனால் அதனை மறுத்து தன்னுடைய தனிமை வாழ்கையினை கடத்தியுள்ளார் நடிகை கனகா.
மேலும் சொத்துக்களை தன்னிடம் இருந்து யாரவது பறித்து விடுவார்களோ என்ற அச்சத்திலேயே வீட்டை விட்டு வெளியே வருவதற்கு தயங்கி வந்துள்ளார் கனகா என்று கூறப்படுகிறது.
முன்னதாக, கனகாவின் அம்மா தேவிகா மரணம் கனாகவை மிகவும் சோகமாக்கியது. அவரின் வாழ்க்கையே இருண்ட நிலைக்கு செல்ல, அந்த நேரத்தில் கனகாவிற்கு மேனஜேராக ஒருவர் வந்தார்
பின்னர், அவர் வந்த பிறகு கனகா மீண்டும் தன் செகண்ட் இன்னிங்ஸை தொடங்கி நன்றாக தான் சென்றார்.
அந்த மேனஜருக்கு கனகா மேல் ஒரு தலை காதல் இருந்துள்ளது, அதை அவர் சொல்ல வருவதற்கு முன்பே, கனகா, இவர் நம்மிடம் வேறு விதமாக தவறாக நடந்துக்கொள்ள முயற்சிக்கிறாரோ என்று எண்ணி அவரை திட்டி வெளியேற்றி உள்ளார்.
இதனிடையே, காலம் கடந்து அந்த நபர் மரணமடைய, கனகாவிற்கு இந்த உண்மைகள் தெரிய வர, நல்ல வாழ்க்கையையும், நல்ல நபரையும் இழந்துவிட்டோமே என்று மிகவும் நொந்துள்ளார் என ஒரு பிரபல பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்து உள்ளார்.
4
0