மீண்டும் அஜித்தின் சென்டிமெண்ட்: வலிமை ஃபர்ஸ்ட் லுக், டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பா?

3 March 2021, 9:35 pm
Quick Share

தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் எப்போது வெளியாகும் என்பது குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது.

நேர்கொண்ட பார்வை படத்தின் சூப்பர் ஹிட் வெற்றியைத் தொடர்ந்து அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் வலிமை. இந்தப் படத்தை ஹெச் வினோத் இயக்கியுள்ளார். போனி கபூர் இந்தப் படத்தை தயாரித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். வலிமை படத்தில் அஜித்துடன் இணைந்து ஹூமா குரேஸி, கார்த்திகேயா கும்மகோண்டா, துருவன், பவல் நவகீதன், யோகி பாபு, சுமித்ரா, குக் வித் கோமாளி புகழ், ராஜ் அய்யப்பா, அஜ்யுத் குமார், குர்பாணி ஜஜ் ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.

வலிமை படத்தின் அனைத்து காட்சிகளும் படமாக்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது. ஆனால், இன்னும், ஒரு முக்கியமான பைக் சண்டைக் காட்சி மட்டுமே எடுக்கப்பட உள்ளது. அதுவும், ஸ்பெயின் நாட்டில் தான் அந்த சண்டைக்காட்சி படமாக்கப்பட இருக்கிறது. இந்தப் படத்தில் அஜித்துக்கு ஒரு குத்துப் பாடலும் ரெடியாக இருக்கிறது என்று ஏற்கனவே தகவல் வெளியானது. வலிமை படத்தின் அப்டேட் கேட்டு கேட்டு ஒவ்வொரு ரசிகரும் நொத்துபோய்விட்டனர். அவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

அதன்படி, வரும் 25 ஆம் தேதி வியாழக்கிழமை, வலிமை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக இருப்பதாகவும், ஏப்ரல் 29 ஆம் தேதி வியாழக்கிழமை வலிமை டீசர் வெளியாக இருப்ப தாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இது குறித்து தயாரிப்பாளர் போனி கபூரிடமிருந்து எந்த தகவலும் வெளியாகவில்லை.
இருந்தாலும், தல ரசிகர்கள் அண்மை காலமாக சந்தோஷமாக இருக்கின்றனர்.

காரணம், அஜித்தின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது தான். தொடர்ந்து, வலிமை அப்டேட் கேட்டு சமூக வலைதளங்களில் வெளியான செய்தி தொடர்பாக அஜித் அறிக்கை வெளியிட்டிருந்தார். இதையடுத்து, வலிமை அப்டேட் கேட்டு எந்த தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 2

5

0