மருத்துவ சிகிச்சையால் வந்த வினை? உதடு வீங்கிய நிலையில் வீடியோ வெளியிட்ட இன்ஸ்டா பிரபலம்!

Author: Prasad
22 July 2025, 2:11 pm

வித்தியாசமான உடைகளை அணிந்து பிரபலமான பெண்

தனது இன்ஸ்டா பக்கத்தில் இது ஆடையே இல்லை என்று சொல்வது போலவே ஆடைகள் அணிந்தபடி புகைப்படங்கள் வெளியிட்டு பிரபலமானவர்தான் உர்ஃபி ஜாவேத். இவர் பல ஹிந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். ஆனால் அதன் மூலமாக இவர் ஃபேம்ஸ் ஆனாரோ இல்லையோ தான் அணியும் வித்தியாசமான உடைகளின் மூலம் பிரபலமாக ஆனார். 

Urfi javed gets lip filler dissolved video viral on internet

திடீரென ஜீன்ஸ் பேண்ட்டை மேலாடையாக உடுத்திக்கொண்டு மும்பை தெருக்களில் நடந்துப்போவார். திடீரென வெறும் காகிதங்களை ஒட்டவைத்து அதை உடையாக  அணிந்து தெருக்களில் சென்று பீதியை கிளப்புவார். இவ்வாறு பல வித்தியாசமான? முயற்சிகளின் மூலமாகத்தான் இவர் பிரபலமாக ஆனார். இந்த நிலையில் உர்ஃபி ஜாவேத் தனது லிப் ஃபில்லரை  நீக்கியது குறித்தான வீடியோ ஒன்றை வெளியிட்டு அதிர்வலைகளை கிளப்பியுள்ளார்.

உதடு வீங்கிய நிலையில் உர்ஃபி

உர்ஃபி ஜாவேத் தனது 18 ஆவது வயதில் உதட்டில் லிப் ஃபில்லர் ஒன்றை போட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. லிப் ஃபில்லர் போட்டுக்கொள்வதால் உதடு மிகவும் கவர்ச்சியாகவும் வசீகரமாகவும் தென்படும். இதனை பல நடிகைகள் போட்டுக்கொள்வது வழக்கம்தான். அதே போல்தான் உர்ஃபியும் போட்டுக்கொண்டார்.

ஆனால் அந்த லிப் ஃபில்லரை வைத்த மருத்துவர் அதனை சரியாக வைக்கவில்லையாம். இதனால் தனது லிப் ஃபில்லரை நீக்கிவிட்டு இயற்கையான அழகுடனேயே இருந்துவிடலாம் என உர்ஃபி முடிவு செய்துள்ளார். இதன் காரணமாக மருத்துவர் ஒருவரை அணுகி தனது உதட்டில் வைக்கப்பட்ட லிப் ஃபில்லரை நீக்கியுள்ளார். லிப் ஃபில்லரை நீக்குவதால் ஏற்படும் பின் விளைவுகள் குறித்து தெரியப்படுத்தும் வகையில் தான் லிப் ஃபில்லர் நீக்கிய வீடியோவையும் உர்ஃபி தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துகொண்டுள்ளார். 

லிப் ஃபில்லர் நீக்கப்பட்ட பின் அவரது உதடுகள் வீங்கிப்போயின. இது லிப் ஃபில்லரை நீக்கியதன் பின் விளைவு என கூறப்படுகிறது.

உர்ஃபி ஜாவேத்தின் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் நெட்டிசன்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!