மீண்டும் களமிறங்கும் வடிவேலு: திரும்ப வரும் நாய் சேகர்!

Author: Udayachandran RadhaKrishnan
29 March 2021, 10:58 am
Vadivelu - Updatenews360
Quick Share

நாய் சேகர் படத்தின் மூலமாக வைகைப்புயல் வடிவேலு மீண்டும் தமிழ் சினிமாவிற்கு ரீ எண்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்தவர் நடிகர் வடிவேலு. சிவாஜி, ரஜினி, கமல், விஜய், அஜித் என்று மாஸ் ஹீரோக்களுடன் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். கவுண்டமனி, செந்தில் ஆகியோருடன் இணைந்து ஏராளமான நகைச்சுவை காட்சிகளில் நடித்து அசத்தியுள்ளார். இன்றும், வடிவேலுவின் டயலாக்கை வைத்து மீம்ஸ் உருவாக்கி வருகின்றனர்.

வடிவேலு நடிப்பில் வந்த இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து, இந்தப் படத்தின் அடுத்த பாகம், இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி படம் உருவாக இருந்த து. இந்தப் படத்தில் வடிவேலு நடிக்க மறுத்த நிலையில், புதிய படங்களில் வடிவேலுவை ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்தது.

இதன் காரணமாக, வடிவேலு சில வருடங்களாக படங்களில் நடிக்கவில்லை. அவருக்கு பட வாய்ப்பும் கொடுக்கப்படவில்லை. கடைசியாக விஜய் நடிப்பில் வந்த மெர்சல் பட த்தில் நடித்திருந்தார். சினிமாவில் நடிக்க வாய்ப்பு வேண்டி பல முறை கண்ணீர் விட்டு கதறியும் அழுதுள்ளார்.

இந்த நிலையில், தற்போது இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் புதிய பட த்தில் வடிவேலு ஹீரோவாக நடிக்க இருக்கிறார். சுராஜ் – வடிவேலு கூட்டணியில் உருவாகும் அந்தப் படத்திற்கு நாய் சேகர் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இது தலைநகரம் பட த்தில் நடித்துள்ள வடிவேலு கதாபாத்திரத்தின் பெயர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தலைநகரம், படிக்காதவன், மருதமலை போன்ற படங்களை இயக்கிய சுராஜ் இயக்கும் புதிய படத்தில் வடிவேலு ஹீரோவாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்திற்கு நாய் சேகர் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நாய் சேகர் பட த்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் தமிழக சட்டமன்ற தேர்தல் முடிந்த பிறகே தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது. இது குறித்து முறையான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Views: - 175

22

5