இன்னொரு வாட்டி என்ன மாதிரி நடிச்ச…. பிரபல நடிகரை ஆள் வச்சி அடித்து கொலை மிரட்டல் விடுத்த வடிவேலு!

Author: Shree
2 August 2023, 2:25 pm

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி காமெடியன் என்ற இடத்தை தக்க வைத்திருந்தவர் நடிகர் வடிவேலு. அடுத்தடுத்த படம், உச்ச நடிகர்களுடன் வாய்ப்பு , மளமளவென உயர்ந்த சம்பளம் இது எல்லாம் தலைக்கணமாகிவிட்டது. அதன் பின்னர் படப்பிடிப்புக்கு சரியான நேரத்திற்கு போகாமல் டகால் அடிப்பது, பணத்தை வாங்கிவிட்டு ஒரு பேச்சு பேசுவது, தன்னைவிட்டால் வேறு யாரும் இல்லை என திமிர் காட்டுவது என இருந்து வந்தார்.

இதனால் வடிவேலுவுக்கு தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காமல் சில ஆண்டுகள் சினிமாவி விட்டு ஒதுங்கியே இருந்தார். மேலும் தன்னுடன் நடிகர் நடிகர்களை வளரவிடாமல் கொடுமைப்படுத்தியதாக பலர் பேட்டிகளில் கூறியிருக்கிறார்கள். அப்படித்தான் தற்போது பிரபல காமெடி நடிகர் காதல் சுகுமார் வடிவேலு குறித்து பேட்டி ஒன்றில் ஒரு பரபரப்பான சம்பவத்தை கூறி பேரதிர்ச்சி கொடுத்துள்ளார்.

vadivelu

அதாவது, வடிவேலு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது நான் வடிவேலு சார் மாதிரி ஒரு படத்தில் நடித்திருந்தேன். அந்த காமெடி மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. அதன் பின் ஒரு நாள், வடிவேலு சார் அந்த காமெடி பார்த்துவிட்டு என்னை அழைத்துவர சொல்லி முத்துக்காளை, போண்டா மணி ஆகியோரை அனுப்பி வைத்தார்.

நானும் சந்திசோஷமாக வடிவேலு சார் பார்க்க போனேன். முதலில் என் நடிப்பை பாராட்டிய அவர் “என் வயித்துல பொறந்தவன் மாதிரி இருக்கான்னு என் ஆத்தா சொல்லுவாங்க, என்று வடிவேலு என்னிடம் சொன்னாரு. பின்னர் அங்கிருந்த போண்டாமணி, முத்துக்காளை ரெண்டு பரையும் வெளியில் போக சொல்லிவிட்டு ” ஒவ்வொரு கம்பெனியா போய், என்னை மாதிரி நடிப்பேன்னு சொல்றியாமேன்னு கேட்டாரு . சினிமாவுல நடிக்கமாட்டேனு சொல்லிட்டு நடிக்குற என பேசிக்கொண்டே பின்னாடி இருந்து ஒருவர் அடித்தார்.

நான் என்ன? என்று கேட்டதும் எதிர்த்து பேசுறியான்னு அடிச்சாங்க ஏதோ திட்டமிட்டு பண்ண பாக்குறாங்க என்று நினைத்து நான் இனிமேல் படங்களில் நடிக்கவே மாட்டேன் விட்டுவிடுங்கள் என பயந்து ஊருக்கே ஓடிவிட்டேன். பின்னர் படவாய்ப்புகள் எதுவுமே கிடைக்கவில்லை. இதனால் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்துக்கொள்ளலாம் என நினைத்தேன் என் மனைவி தான் எனக்கு ஆறுதலாக இருந்தார் என காதல் சுகுமார் கூறியுள்ளார். தன்னை போல் நடித்தார் என்பதற்காக வடிவேலு இவ்வளவு மோசமாக நடந்துக்கொண்டாரா? என கோலிவுட்டே அதிர்ந்துவிட்டது.

  • ajith kumar talking about quit cinema in interview after lonng time சினிமாவுக்கு டாட்டா! எப்போவேணாலும் நடக்கலாம்? பேட்டியில் அதிர்ச்சியை கிளப்பிய அஜித்…