மீண்டும் இணையும் வடிவேலு – ரஜினி கூட்டணி..

Author: Rajesh
7 March 2022, 1:10 pm
Quick Share

‘சந்திரமுகி’, ‘குசேலன்’ உள்ளிட்ட படங்களில் ரஜினி – வடிவேலு கூட்டணியில் இடம் பெற்ற காமெடி காட்சிகள் ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்பட்டவை.. சில வருடங்களாக திரையுலகிலிருந்து வடிவேலு சில காலங்கள் ஒதுங்கியிருந்தார். தற்போது மீண்டும் முழுவீச்சில் நடிக்கத் தொடங்கியுள்ளார்.

இதனிடையே, இயக்குனர், நெல்சன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் ரஜினி நாயகனாக நடிக்கவுள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. ‘பீஸ்ட்’ பணிகளை முடித்துக் கொடுத்துவிட்டு, ரஜினி படத்தின் பணிகளை முழுவீச்சில் தொடங்கவுள்ளார் நெல்சன்.

இதில் மிக முக்கியமான காமெடி கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க வடிவேலு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. காமெடி கலந்த கமர்ஷியல் கதையாக ரஜினியின் 169-வது படமாகும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Views: - 466

1

0