சொந்த காசில் சூனியம் வைத்து கொண்டும் திருந்தாத பிரபல காமெடி நடிகர்.. மீண்டும் ரெட் கார்ட் போடுவதற்கு வாய்ப்பு..?
Author: Vignesh1 டிசம்பர் 2022, 1:30 மணி
தமிழ் சினிமாவில் கவுண்டமணி, செந்திலுக்கு பிறகு பெரியளவில் காமெடி நடிகராக புகழப்பட்டவர் நடிகர் வடிவேலு. வைகைப்புயல் என்ற பெருமையோடு தமிழில் கொடிக்கட்டி பறந்த வடிவேலு சில அரசியல் பிரச்சனைகளில் சிக்கியும் சங்கருடன் ஏற்பட்ட பிரச்சனையாலும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு சினிமாவை விட்டு ஒதுக்கப்பட்டார்.
நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்
தற்போது அந்த பிரச்சனைகளை எல்லாம் முடித்துவிட்டு மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார் வைகைப்புயல். நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், சந்திரமுகி 2 உள்ளிட்ட பல படங்களில் ஒரே நேரத்தில் நடித்து வருகிறாராம். அப்படி இருக்கையில் சந்திரமுகி 2 படத்தின் ஷூட்டிங் சமயத்தில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் வேலையாக இடையில் சென்றுவிட்டாராம். மேலும் சந்திரமுகி 2வில் பெரியளவில் முக்கியத்துவம் கொடுக்கவில்லையாம்.
மீண்டும் ரெட் கார்ட்
இயக்குனர் பி வாசுவிடமும் எடக்குமுடக்காக பேசி வருகிறாராம். இதனை அறிந்த லைக்கா நிறுவனம் சந்திரமுகி 2 முடிந்தப்பின் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்க்கு வாருங்கள் என்று பஞ்சாயத்து பேசி அனுப்பி வைத்துள்ளாராம். இரு படத்தையும் லைக்கா தான் தயாரிப்பதால் அதையும் காதில் வாங்காதபடி சென்றுள்ளாராம் வடிவேலு.
ஏற்கனவே சங்கர் தயாரித்த படத்தில் இப்படித்தான் வடிவேலு நடந்து கொண்டார். மீண்டும் அதேபோல் வடிவேலு செய்து வருவது மீண்டும் ரெட் கார்ட் போடுவதற்கு ஆச்சரியமே இல்லை என்று கோலிவுட் முழுக்க பேசுபொருளாக மாறி வருகிறது.
1
0