நான் ஆடையில்லாம வந்தேன்னு? என்னென்னமோ பேசுறீங்க?- கொதித்தெழுந்த வடிவேலு…

Author: Prasad
23 April 2025, 4:15 pm

ராஜ்கிரண் அழைத்து வந்த வடிவேலு

தனது ரசிகர் ஒருவரின் திருமணத்திற்காக மதுரைக்குச் சென்றிருந்தபோதுதான் வடிவேலுவை முதன்முதலில் சந்தித்தார் ராஜ்கிரண். மீண்டும் சென்னைக்கு ரயில் ஏற வெகு நேரம் இருந்த நிலையில் அவருக்கு பொழுதுபோவதற்காக வடிவேலுவை அவரது அறைக்கு அனுப்பினார்கள்.

vadivelu talks about rajkiran in recent interview

வடிவேலு அங்கு ராஜ்கிரணை தனது நகைச்சுவை கலந்த நடிப்பால் சிரிக்க வைத்தார். இவரது திறமையை மனதில் வைத்துதான் ராஜ்கிரண் “என் ராசாவின் மனசிலே” திரைப்படத்தில் நடிக்கவைத்தார். அதனை தொடர்ந்து வடிவேலுவின் கெரியர் உச்சத்திற்கு சென்றது. 

அம்மணமாவா வந்தேன்?

இந்த நிலையில் “கேங்கரஸ்” திரைப்படத்திற்காக வடிவேலு சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டார். அப்போது நிருபர் “உங்களுக்கும் ராஜ்கிரணுக்குமான உறவு எப்படிப்பட்டது?” என கேட்டார். 

அதற்கு வடிவேலு, “இதை பல நாட்களாக வெளியே சொல்லவேண்டும் என நினைத்தேன். இப்போது சொல்கிறேன். இந்த திரையுலகில் என்னை நான்கு வருடங்கள் தன்னுடைய அலுவலகத்திலேயே வைத்துக்கொண்டு என்னை வாழவைத்தவர் அவர்தான். அவருக்கு பிறகு ஆர்.வி.உதயகுமாரிடம் சென்றுவிட்டேன்” என கூறினார்.

vadivelu talks about rajkiran in recent interview

மேலும் பேசிய அவர், “ஊரில் இருந்து சினிமாவுக்கு வரும்போது வேஷ்டி, சட்டை,  பேண்ட்டோடுதான் வந்தேன். நான் அம்மணமாகவெல்லாம் வரவில்லை. இங்க வந்து பார்த்தால் வேட்டி சட்டை வாங்கிக்கொடுத்தார், டவுசர் வாங்கிக்கொடுத்தார், தாலாட்டினார் என்று என்னென்னமோ பேச ஆரம்பித்துவிட்டார்கள். ஆனாலும் சினிமாவில் என்னை நிலைத்து நிற்கவைத்தவர் ராஜ்கிரண்தான்”  என்றும் அவர் கூறினார். வடிவேலு பேசிய இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

  • bayilvan ranganathan review retro movie முன்னாடியே இது நடந்திருக்கு, ஆனா இதான் ஃபர்ஸ்ட் டைம்? ரெட்ரோ படத்தை பிரித்து மேய்ந்த பயில்வான்! 
  • Leave a Reply