என்னயே திட்டிட்டீயா…உனக்கு எதுக்கு சோறு…வடிவேலுவின் கொடூரம்.!

Author: Selvan
2 March 2025, 12:19 pm

வடிவேலுவின் கொடூர முகம்

தமிழ் சினிமாவில் தன்னுடைய காமெடியால் பலரை சிரிக்க வைத்த வடிவேல் நிஜ வாழ்க்கையில் பலருடைய சாபத்திற்கு ஆளாகி வருகிறார்,இவர் கூட நடித்த பல துணை நடிகர்கள் சமூக வலைதளத்தில் வடிவேலுவின் உண்மை முகத்தை வெளிப்படையாக பேசி உடைத்து வருகின்றனர்.

இதையும் படியுங்க: சும்மா அதிருதுல்ல…24 மணி நேரத்தில் ‘குட் பேட் அக்லி’ பிரம்மாண்ட சாதனை.!

அந்த வகையில் பிரபல நகைச்சுவை நடிகரான பெஞ்சமின் அளித்துள்ள பேட்டியில் வடிவேலு கூட சேர்ந்து நான் நடித்த போது ஒரு தடவை என்ன அவர் சாப்பிடக்கூடாது என்று சொன்னதைவிட,என்னுடைய தட்டை தூக்கி வீசி கொடூரமாக நடந்து கொண்டார் என்று பேசியுள்ளார்.

Vadivelu controversy

நாடகங்களில் மூலம் தன்னுடைய பயணத்தை தொடங்கி சினிமாவில் எப்படியாவது நடிக்க வேண்டும்னு பல தடவை போராடிய அவருக்கு இயக்குனர் சேரன் வெற்றிக்கொடிகட்டு படத்தில் வாய்ப்பு கொடுத்தார்.

அந்த படத்தில் வடிவேலு முக்கிய ரோலில் நடித்திருப்பார்,அவருக்கு மச்சானாக பெஞ்சமின் நடித்திருப்பார்,அப்போது ஒரு காட்சியில் வடிவேலு துபாயில் இருந்து வரும் போது அவரை கெட்ட வார்த்தையால் திட்டுவார்,இப்போதும் அந்த காட்சியை டிவியில் ரசிகர்கள் பார்த்தால் வாய்விட்டு சிரிக்கின்றனர்,ஆனால் அதே காட்சி தான் பெஞ்சமினுக்கு சோகமாக அமைந்துள்ளது.

வெற்றிகொடிக்கட்டு படத்தின் ஷூட்டிங் போது வடிவேலுவை நான் திட்டுற காட்சி இருந்ததால் என்னை ரொம்ப டார்ச்சர் செய்தார்,அதன் பிறகு என்னை திட்டுற அளவுக்கு நீ பெரிய ஆளா..நீ எப்படி ஊருக்கு போறன்னு பார்க்குறேன்,மேலும் அந்த காட்சியை படத்தில் இருந்து நீக்குங்கள் என்று இயக்குனரிடம் வாதாடினார்.

அப்போது ஒரு நாள் படப்பிடிப்பு போது தட்டை எடுத்து சாப்பிட போனேன்,அப்போது அங்கே வந்த ஒருவர் என்னோட தட்டை பிடுங்கி தூக்கி எறிந்தார்,அவரிடம் நானும் இந்த படத்துல நடித்துள்ளேன் என கூறினேன்,அதற்கு நடிச்சிருந்தா சாப்புடுவியா,இன்னைக்கு 20 பேருக்கு தான் சாப்பாடு,நீ கிளம்பி போ என்று வெளியே தள்ளினார்கள்.

ஒரு வாய் சாப்பாடு சாப்பிட கூட எனக்கு அருகதையா இல்லையா என்று கண்ணீரோடு வெளியே வந்தேன் என மனம் உடைஞ்சு அந்த பேட்டியில் பேசியிருப்பார்.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?