“நேர்கொண்ட பார்வை படத்தை என்னடா பண்ணி வெச்சு இருக்கீங்க?” வைரலாகும் வக்கீல்சாப் Court Scene !

10 April 2021, 1:48 pm
Quick Share

வெற்றிக்கு ஷார்ட் கட் ஃபார்முலா தான் ரீமேக் படங்கள் தான். ‘பிங்க்’ படத்தின் தென்னிந்திய மொழிகளின் ரீமேக் உரிமையை பெரும் விலை கொடுத்து போனிகபூர் வாங்கினார். தமிழில் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் ‘நேர்கொண்ட பார்வை’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது.

இதன் தெலுகு ரீமேக்கை பவன் கல்யாண் நடிப்பில் இயக்குநர் ஸ்ரீராம் வேணு இயக்கியுள்ளார். ஓ மை ஃபிரெண்ட், மிடில் கிளாஸ் அப்பாயி போன்ற வெற்றி படங்களை இயக்கிய ஸ்ரீராம் வேணு, நேர்கொண்ட பார்வை படத்தை தெலுங்கில் வக்கீல் சாப் என்று இயக்கி, நேற்று வெளியாகி இருந்தது.

நேர்கொண்ட பார்வை படத்தின் ஹைலைட் என்ன என்றால் நீதிமன்றத்தில் நடக்கும் வாக்குவாத காட்சிகள் தான். ஒரே அறைக்குள் ஒரே இடத்தில் நடந்தாலும் ரசிகர்களுக்கு சலிப்பு தட்டாமல் அஜித்தின் நடிப்பும், வினோத்தின் வசனங்களும் கைகொடுத்தது. ஆனால் அதே படத்தை தெலுங்கில் ரீமேக் செய்கிறேன் என்று கதிகலங்க வைத்து உள்ளார் ஸ்ரீராம் வேணு. தமிழில் ரங்கராஜ் பாண்டே செய்த கதாபாத்திரத்தில் பிரகாஷ்ராஜ் செய்திருந்தார். தற்போது வக்கீல் சாப் படத்தின் நீதிமன்ற காட்சி ஒன்று வைரலாக பரவி வருகிறது.

அதில் வக்கீலான பவன்கல்யாண் எதிர் வக்கீல் ஆன பிரகாஷ்ராஜை அடிக்க செல்கிறார், மேஜையை போட்டு உடைக்கிறார். நீதிபதியயும், நீதி மன்றத்தையும் அவமதித்ததால், இதையெல்லாம் செய்த பவன்கல்யாண் அவர்களைதான் முதலில் சிறைக்குள் வைக்க வேண்டும். ஆனால் இங்கு தெலுங்கு மக்களுக்காக நிறைய மசாலாவை சேர்த்துள்ளார்கள் போல. இதை பார்த்த நேர்கொண்ட பார்வை படத்தின் ரசிகர்கள், “என்னடா பண்ணி வெச்சு இருக்கீங்க?” என்று குமுறுகிறார்கள்.

Views: - 88

0

2