இப்படி ஏமாத்திட்டீங்களே சந்தானம்- கடுப்பில் வாய்விட்ட பிரபல விமர்சகர்! என்னவா இருக்கும்?
Author: Prasad17 May 2025, 4:19 pm
கலவையான விமர்சனம்
“டிடி ரிட்டன்ஸ்” என்ற அட்டகாசமான காமெடி ஹாரர் திரைப்படத்தை தொடர்ந்து அதன் தொடர்ச்சியாக நேற்று வெளிவந்துள்ள திரைப்படம்தான் “டிடி நெக்ஸ்ட் லெவல்”. சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள இத்திரைப்படத்தை பிரேம் ஆனந்த் இயக்கியிருந்தார். நடிகர் ஆர்யா இத்திரைப்படத்தை தயாரித்திருந்தார்.

“டிடி ரிட்டன்ஸ்” திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருந்ததால் “டிடி நெக்ஸ்ட் லெவல்” திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இத்திரைப்படத்தை பார்த்த பலரும் “இதில் சந்தானத்தின் காமெடி ஒர்க் அவுட் ஆகவில்லை” என விமர்சிக்கின்றனர். இந்த நிலையில் வலைப்பேச்சு குழுவினர் “டிடி நெக்ஸ்ட் லெவல்” திரைப்படத்தை மிகவும் கடுமையாக தங்களது வீடியோவில் விமர்சித்துள்ளனர்.
ஏமாத்திட்டீங்களே சந்தானம்
“கறையான் அரித்த மரக்கட்டையை கையில் எடுத்தால்தான் தெரியும் என சொல்வார்கள். கறையான் அரித்த மரக்கட்டை பார்ப்பதற்கு திடமாக இருப்பது போல் தெரியும். ஆனால் அதனை தூக்கினால் உதிர்ந்துப்போய்விடும். அது போல் ஆகிவிட்டாரோ சந்தானம் என்று எனக்கு தோன்றியது. திரும்புகிற இடம் எல்லாம் சந்தானம் புகழ் பாடிக்கொண்டிருந்தேன் நான். ஆனால் என்னை ரொம்ப ஏமாற்றிவிட்டார்” என அந்தணன் கூற,

அதன் பின் பேசத்தொடங்கிய சக்தி, “இந்த படத்தின் முந்தைய பாகமான டிடி ரிட்டன்ஸ் திரைப்படத்தில் காமெடி நன்றாக ஒர்க் அவுட் ஆகியிருந்தது. ஆனால் டிடி நெக்ஸ் லெவலில் காமெடி என்று பார்க்கும்போது குறைவாகத்தான் இருக்கிறது” என கூறினார்.
மேலும் பேசிய அந்தணன், “படத்தில் சந்தானம், மொட்டை ராஜேந்திரன், மாறன், இட்ஸ் பிரசாந்த் என இவ்வளவு பேர் இருக்கிறார்கள். இவர்கள் எல்லாரும் இருந்தும் காமெடி இல்லை என்பது எவ்வளவு பெரிய வருத்தம்” என மனம் நொந்தபடி விமர்சித்துள்ளார்.
