தல அஜித்தின் வலிமை ஃபர்ஸ்ட் லுக் எப்போது?

17 January 2021, 4:36 pm
Quick Share


தல அஜித் நடித்து வரும் வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்போது வெளிவரும் என்பது குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது.


நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றிக்குப் பிறகு அஜித் – இயக்குநர் ஹெச் வினோத் கூட்டணியில் உருவாகி வரும் படம் வலிமை. போலீஸ் கதையை மையப்படுத்திய இந்தப் படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். அஜித்துக்கு ஜோடியாக ஹூமா குரேஸி நடிக்கிறார். மேலும், கார்த்திகேயா கும்மகோண்டா, பவல் நவகீதன், யோகி பாபு, குக் வித் கோமாளி ஃபேம் புகழ் ஆகியோர் பலர் நடிக்கின்றனர்.


போனி கபூர் இந்தப் படத்தை தயாரிக்கிறார். யுவன் சங்கர் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். சென்னை, ஹைதராபாத் ஆகிய இடங்களில் வலிமை படப்பிடிப்பு நடந்து வருகிறது. தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ள வலிமை படத்தின் படப்பிடிப்பு வரும் பிப்ரவரி மாதத்தில் முடிந்துவிடும் கூறப்படுகிறது.


வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்போது வெளிவரும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த நிலையில், வலிமை படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு வலிமை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இது தல ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. அண்மையில், வலிமை படத்தில் அஜித் குடும்பத்தோடு இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 0

0

0