100, 200 ரூபாய்க்குக் கூட கணக்கு பார்க்கும் லைக்கா… நாய் சேகர் ரிட்டன்ஸ் படக்குழு அப்செட்..!

Author: Rajesh
27 February 2022, 5:01 pm
Quick Share

நடிகர் வடிவேலு தற்போது வடிவேலு தற்போது நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் ரசிகர்களின் மிகப் பெரிய எதிர்பார்ப்பில் தயாராகி வருகிறது. இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் வடிவேலு,ரெடின் கிங்ஸ்லி, முனிஸ்காந்த் உள்ளிட்ட நடிகர்கள் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்க இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

நாய் சேகர் படக்குழு படத்தை மிக பிரம்மாண்டமாக வடிவேலுவின் கம்பேக் திரைப்படமாக அமைய வேண்டும் என்று படக்குழுவினர் மிகப்பெரிய உழைப்பை போட்டு படத்தை எடுத்து வருகின்றனர்.

இதுவரை லைக்கா நிறுவனம் தயாரிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் பிரமாண்டமான படங்களாகவும்இ பெரிய பட்ஜெட் படங்களாகவும் தான் இருந்து இருக்கிறது. இப்படி இப்படி தாமாக முன்வந்து வடிவேலுக்கு கைகொடுத்த லைகா நிறுவனம் தற்போது 100 ரூபாய் 200 ரூபாய்க்குக் கூட கணக்கு பார்ப்பதால் படக்குழு அதிர்ச்சியில் இருக்கின்றனராம்.

நாய் சேகர் படத்தில் வடிவேலு ஒரு பணக்கார கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதற்கு ஏற்றார் போல் சில ஆடம்பர வசதிகளை திரையில் காண்பித்தால் மட்டுமே அது ரசிகர்கள் பார்க்கும் போது எதார்த்தமாகவும் உண்மையாகவும் இருக்கும். ஆனால் அதையெல்லாம் கொடுப்பதற்கு லைகா நிறுவனம் தயாராக இல்லை என்று கூறப்படுகிறது.

மேலும், ஒரு நாள் படப்பிடிப்புக்கு எவ்வளவு செலவாகிறது என்பதை கணக்கில் வைத்துக்கொண்டு, ஏன் இவ்வளவு செலவு செய்கிறீர்கள் கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள் என்று விடாப்பிடியாய் நிற்கிறார்களாம். இதனால் படக்குழு மிகுந்த அப்செட் ஆகி இருக்கிறதாம்.

வடிவேலுவை வைத்து படம் எடுத்தால் நன்றாக கல்லா கட்டலாம் என்று நினைத்த லைக்கா நிறுவனம் தற்போது ஏன் அப்படி நடந்து கொள்கிறது என்பது தான் சினிமா வட்டாரத்தின் கேள்வியாக இருக்கிறது.

Views: - 458

0

0