விஜய்கிட்டயே ஏமாறுங்க- தானாக வந்து வாய்கொடுத்து ட்ரோலில் மாட்டிக்கொண்ட வள்ளிகும்மி பிரபலம்…

Author: Prasad
27 May 2025, 2:11 pm

வள்ளிகும்மி பிரபலம்

வள்ளிகும்மி ஆடி ரீல்ஸ் போட்டு தமிழகம் முழுவதும் பிரபலமானவர்தான் சங்கீதா. இவர் கண் அடித்து ஆடிய வள்ளிகும்மி ரீல்ஸ் இணையத்தில் வைரல் ஆன நிலையில் பல யூட்யூப் சேன்னல்களில் இவரை பேட்டிக்கு அழைத்தனர். அதனை தொடர்ந்து இணையத்தில் டிரெண்டிங்காக வலம் வரத்தொடங்கினார் இவர். எனினும் இவரை பலரும் ட்ரோல் செய்யத்தொடங்கினர். சமீபத்தில் நீயா நானா நிகழ்ச்சியில் இவர் கலந்துகொண்டபோது கூட தன்னை பலரும் ட்ரோல் செய்வதாக தனது மன வருத்தத்தை வெளிப்படுத்தினார். 

valli kummi famous sangeetha told about tvk party trolled by netizens

தவெகவில் இணைந்த சங்கீதா…

இதனிடையே இவர் சமீபத்தில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் சங்கீதா பேசிய சில விஷயங்களால் அவர் மீண்டும் ட்ரோலுக்குள்ளாக்கப்பட்டு வருகிறார். “பல ஆண்டுகளாக திமுக, அதிமுக ஆகிய கட்சிகளுக்கு மாற்றி மாற்றி ஓட்டு போட்டு கஷ்டப்பட்டு வருகிறீர்கள். தவெக ஆட்சிக்கு வந்தாலும் இதே கஷ்டத்தைதானே படப்போகிறீர்கள் என வைத்துக்கொள்வோம். ஆட்சியை தவெகவுக்கு கொடுத்துவிட்டு போங்கள். கஷ்டப்படவேண்டும் என்று முடிவு செய்தபிறகு எந்த கட்சியாக இருந்தால் என்ன?” என்று அப்பேட்டியில் அவர் பேசியுள்ளார். இவர் இவ்வாறு பேசியது சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. 

  • dd next level movie sad collection report கலெக்சனில் மண்ணை கவ்விய டிடி நெகஸ்ட் லெவல்? இப்படி ஒரு நிலைமையா வரணும்!
  • Leave a Reply