நடிகையை அடித்து உதைத்து கொடுமை – மீண்டும் பாலா மீது பாய்ந்த வழக்கு?
Author: Shree21 மார்ச் 2023, 12:27 மணி
தமிழ் சினிமாவின் விசித்திர இயக்குனர் பாலா தொடர்ந்து தன் படங்களில் நடிக்கும் நடிகர், நடிகைகளை நல்ல நடிப்பு வரவைக்க கொடுமை படுத்துவதாக பரதேசி படத்தில் நடித்த நடிகர்கள் புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினர்.
அண்மையில் கூட பிதாமகன் மகன் பட தயாரிப்பாளர் வி.ஏ.துரையிடம் ரூ. 25 லட்சம் பணம் வாங்கிவிட்டு அவரை ஏமாற்றிவிட்டதாக கூறினார். இந்நிலையில் தற்போது பாலா சூர்யாவை வைத்து வணங்கான் படத்தை இயக்கி வருகிறார்.
இப்படத்தில் நடிக்க கேரளாவில் இருந்து சில துணை நடிகைகள் 3 நாள் படப்பிடிப்புக்கு ரூ 22,000 சம்பளம் என்று பேசி அழைத்து வந்த்துள்ளனர். ஆனால், அவர் கூறியபடி சம்பளம் கொடுக்காததால் முறையிட்டு கேட்டதற்கு துணை நடிகைகளை அடித்து கடுமையாக தாக்கி இருக்கிறார் அப்படத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜிதின்.
இதையடுத்து பாதிக்கப்பட்ட நடிகை லிண்டா என்பவர் கன்னியாகுமரி காவல்நிலையத்தில் ஜிதின் மீது புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். தொடர்ந்து பாலா படத்தில் இது போன்ற சர்ச்சையான காரியங்கள் நடந்து வருவதால் அவர் மீது ரசிகர்கள் வெறுப்பை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
0
0