“இந்த ஆங்கிள்ல நான் பார்த்ததே இல்லையே” – வாணி போஜனின் போட்டோவை உத்து உத்து பார்க்கும் இளசுகள்

26 February 2021, 4:58 pm
Quick Share

ஐயோ ஐயோ கொல்லுராலே என மீரா அக்காவாக வந்து எல்லோரையும் ரசிக்க வைத்தவர் வாணி போஜன். ஓ மை கடவுளே படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான வாணி போஜன், சென்னை சில்க்ஸ் விளம்பரம் மூலமாக மக்களுக்கு தெரிய ஆரம்பித்தார். அதன்பின் மாயா, ஆஹா, தெய்வமகள், லட்சுமி வந்தாச்சு போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்தார்.

சின்னத்திரையின் நயன்தாரா என்று அழைக்கப்பட்ட வாணி போஜன் இல்லத்தரசிகளுக்கு மிகவும் பரிச்சயமானவர். ஓ மை கடவுளே படங்களைத் தவிர ஓர் இரவு, அதிகாரம் 29 போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது வெளியான ட்ரிபிள்ஸ் வெப்சீரிஸில் ஜெய் உடன் நடித்தார். கைவசம் லாக்கப் என்ற படம் வைத்துள்ளார்.

தற்போது ஓஹோவென வளர்ந்து வரும் வாணி போஜன் சமூக வலைதளங்களில் ஆக்டிவ் ஆக இருந்து வருகிறார். அடிக்கடி போட்டோவை பதிவேற்றி ரசிகர்களை கவர்ந்து வரும் அவர் தற்போது வெளியிட்டுள்ள ஒரு போட்டோவில் மாடர்ன் உடை அணிந்து கவர்ச்சி காட்டியுள்ளார். காரில் உட்கார்ந்து எடுக்கப்பட்ட இந்த செல்பியை பார்த்த ரசிகர்கள், “இந்த ஆங்கிள்ல, இந்த மாதிரி மாடர்ன் ட்ரஸ்ல தலைவிய நான் பார்த்ததே இல்லையே” என கண்கள் விரிய பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

Views: - 1

33

17