பிரபுதேவாவை வெறித்தனமா காதலிச்சு.. அதெல்லாம் மாத்திக்கிட்டேன் ஆனா.. மனம் திறந்த வனிதா..!

Author: Vignesh
24 July 2023, 10:45 am

தமிழ் சினிமாவில் மூன்று தலைமுறைகளாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் விஜயகுமார் மறைந்த மஞ்சுளா தம்பதியின் மூத்த மகள் தான் நடிகை வனிதா. இவர் குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்திருக்கிறார்.

vanitha

இவர் விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதன்முறையாக அறிமுகமானார். பின்பு ஆகாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவருக்கு ஒரு மகன் ஒரு மகள் இருந்த நிலையில் அவரைப் பிரிந்தார்.

vanitha_updatenews360

இதனிடையே, வனிதா இரண்டாம் முறையாக ஒருவரை திருமணம் செய்து கொண்டு அவருக்கும் ஒரு மகள் இருக்கிறார். இதில், முதல் கணவரிடம் ஆகாசும் மகள் வனிதா உடன் மற்றொரு மகளும் அவரது முன்னாள் கணவரிடம் மற்றொரு மகளும் இருந்து வருகின்றனர்.

vanitha_updatenews360

மூன்றாவது முறையாக பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டு ஒரு சில மாதங்களில் விவாகரத்தும் பெற்றுக் கொண்டார். இதனிடையே பீட்டர் பால் உடல்நிலை குறைவால் மரணம் அடைந்தார்.

இந்த நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வனிதா நடன கலைஞர் ஆன சுந்தரம் மாஸ்டரின் வாரிசான பிரபுதேவா குறித்து பேசி உள்ளார். அதில் தான் பிரபுதேவாவை வெறித்தனமாக ஒரு சமயத்தில் காதலித்ததாகவும், காதலன் படம் வெளிவந்த போது அவருடைய புகைப்படங்களை சேகரித்து வைத்துக் கொண்டாராம்.

vanitha vijayakumar

தன்னுடைய அப்பா ஒரு முறை பிரபுதேவாவை வீட்டிற்கு அழைத்து வந்ததாகவும், அப்போது தான் அவருக்காக விதவிதமான பல அசைவ உணவுகளை சமைத்துக் கொடுத்ததாகவும், ஆனால், அவர் அசைவம் சாப்பிட மாட்டேன் என்று கூறிவிட்டதாகவும், பின்னர் தான் உடனடியாக சைவ உணவை சமைத்து கொடுத்ததாகவும், அந்த சமயத்தில் அவருக்காக சைவத்திற்கு மாறவும் செய்தேன் என்று வனிதா பேட்டியில் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

vanitha -updatenews360
  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!