‘புதுசு புதுசா சண்ட போடுராங்களே… ரூம் போட்டு யோசிப்பாங்களோ’ வனிதாவின் நடவடிக்கையால் அதிர்ந்துபோன பிரபலம்…!

10 August 2020, 6:04 pm
Quick Share

தனது மூன்றாவது திருமணம் குறித்து கருத்து தெரிவித்து வந்த பிரபலங்களுக்கு எதிராக, வனிதாவின் புதிய அனுகுமுறை அனைவருக்கும் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.

வனிதா விஜயகுமார் மற்றும் பீட்டர் பால் ஆகியோர் சமீபத்தில் திருமணம் செய்துகொண்டனர். இந்த சம்பவம் குறித்து பீட்டர் பாலின் முன்னாள் மனைவி தனியார் யூ டியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்திருந்தார். மேலும், தனக்கு இந்த சமூகம் நீதி பெற்றுத்தர வேண்டும் எனவும் அவர் கண்ணீர் மல்க கேட்டுக்கொண்டார்.

இந்தநிலையில், அவருக்காக இயக்குனரும், நடிகையுமான லக்ஷ்மி ராமகிருஷ்ணன் குரல் எழுப்பவே, இந்த பிரச்னை சூடு பிடித்தது. அதனை தொடர்ந்து, வனிதா விஜயகுமாரும் அதே தனியார் யூ டியூப் சேனலில் பேச வேண்டும் எனவும், லக்ஷ்மி ராமகிருஷ்ணனையும் அழைக்குமாறு தனியார் யூ டியூப் சேனல் நிர்வாகத்திடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

தொடர்ந்து, அவரவர் வீட்டில் இருந்தபடியே வீடியோ கான்பிரனஸ் மூலம் விவாதம் நடைபெற்றது. ஒரு கட்டத்திற்கு மேல் வார்த்தை போர் அதிகரிக்கவே, வனிதா விஜயகுமார், லக்ஷ்மி ராமகிருஷ்ணனை நாகரீகமற்ற வார்த்தைகள் வாயிலாக தாக்கினார். இதற்கு மான நஷ்ட ஈடு கோரி, 1 கோடியே 25 லட்சம் ரூபாய் பணம் கேட்டு லஷ்மி ராமகிருஷ்ணன் வனிதாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இதற்கு அஞ்சாத வனிதா பதிலுக்கு ரூ. 2.50 கோடி கேட்டு லக்ஷ்மி ராமகிருஷ்ணனுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். யூ டியூபில் தொடங்கிய வார்த்தை போர், நோட்டீசில் போய் நின்றிருக்கிறது. இனியும் என்னென்னவெல்லாம் நடக்குமோ…! என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

Views: - 6

0

0