வனிதாவின் முன்னாள் கணவர் மரணம்.. இரங்கல் தெரிவிக்கும் திரை பிரபலங்கள்..!

Author: Vignesh
29 April 2023, 11:30 am

வனிதா பற்றி நாம் அனைவருக்குமே தெரிந்ததே. சர்ச்சைக்கு பெயர் போன வனிதா, ஆரம்பத்தில் இருந்தே தனது தந்தையுடனும் தாயுடனும் மோதல் போக்கையை ஏற்படுத்திக் கொண்டார்.

3 திருமணங்கள் செய்த வனிதா அனைவருடனும் வாழப் பிடிக்காமல் விவாகரத்து செய்து விட்டார்.

vanitha_updatenews360

நடிகை வனிதா பிக் பாஸுக்கு பிறகு தனியாக youtube சேனல் தொடங்கி நடத்தி வருகிறார். அவர் சமையல், மேக்கப் உள்ளிட்ட பல விஷயங்கள் பற்றி வீடியோ வெளியிட்டு வருகிறார் அவர். அவற்றுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகிறது.

மேலும் சீரியல்கள், படங்கள் என நடிகையாகவும் தொடர்ந்த பிசியாக இருந்து வருகிறார்.

vanitha - updatenews360

இந்த நிலையில், சர்ச்சை நாயகியாக பெயர் வாங்கி வந்த வனிதா இப்பொழுது எந்த பிரச்சனையும் இல்லாமல் தனது கெரியரில் மட்டுமே கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்க இப்பொழுது அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

வனிதா கிட்டத்தட்ட 10 படங்களுக்கும் மேல் நடித்து வருகிறார். இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற போது, தன் 3 ம் திருமணம் குறித்து வெளிப்படையாக பேசினார். அதாவது சிகரெட் மற்றும் குடிப்பழக்கம் போன்றவற்றில் பீட்டர் பால் அடிமையாக இருந்ததாகவும், அதிலிருந்து அவரை வெளியே கொண்டு வர எவ்வளவோ பாடுபட்டதாகவும், ஆனால் அதை அவர் பொருட்படுத்தவே இல்லை என்றும், இவ்வளவு நடந்த பிறகும், அவருடன் எப்படி என்னால் வாழ முடியும் எனவும், இந்த மாதிரி சென்டிமென்ட் விசயத்தில் நான் ரொம்ப வீக், அதனாலதான் எல்லாரும் என்னை ஈஸியா ஏமாத்திடுவாங்க எனக் கூறி கதறி அழுதுள்ளார்.

Peter Paul Vanitha - Updatenews360

இந்நிலையில், பீட்டர் பால் சில நாட்களாக உடல் நலக்குறைவால் இருந்து வருவதாக கூறப்பட்டது. தற்போது பீட்டர் பால் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இது பலரையும் அதிர்ச்சி அடையவைத்துள்ளது.

பீட்டர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்று பல பேட்டிகளில் வனிதா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!