நிர்வாணமா நிக்கிறேன் எல்லாரும் பார்த்துக்கோங்க… பிக் பாஸ் பிரதீப்பை திட்டி தீர்க்கும் பிரபல நடிகை..!

Author: Vignesh
6 November 2023, 8:17 pm

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ள பிரதீப் ஆண்டனி மக்களிடையே நன்கு பரீட்சியமாகிவிட்டார். இவர் ‘அருவி’ என்ற படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானவர். அந்த படம் இவருக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்தது.

அப்படத்தை தொடர்ந்து ‘வாழ்’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. வேறு எந்த ஒரு படத்திலும் பார்க்க முடியவில்லை. இதனிடையே பிரதீப் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டுள்ளார்.

அந்நிகழ்ச்சியில் ஆரம்பம் முதலே மக்களிடத்தில் நல்ல அபிப்ராயத்தை பெற்ற பிரதீப் எதிர்பாராத விதமாக பெண்களுக்கு பாதுகாப்பில்லை என கூறி ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றப்பட்டார். ரதீப் ஆண்டனி வெளியேற்றப்பட்டதால், கோபமடைந்த அவரது ரசிகர்கள், நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள், தொகுப்பாளர் கமல் ஹாசன் மற்றும் இணை போட்டியாளர்களைக் கண்டித்து சமூக ஊடகங்களில் கடுமையாக கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் தன்னால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை எனக்கூறி வெளியேற்றிய கமலுக்கு ஒரே ஒரு புகைப்படத்தின் மூலம் தரமான பதிலடி பிரதீப் கொடுத்துள்ளார். சுற்றி பெண்கள் நிற்க, கமல் கொடுத்த ரெட் கார்டை கையில் வைத்துக் கொண்டு செம்ம ஹாப்பியாக போஸ் பிரதீப் கொடுத்துள்ளார்.

இந்நிலையில், வனிதா பிரதீப் குறித்த பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார். அதில், பிரதீப் நிச்சசையமாக மன ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கிறான் என்றும், அவனுடைய அம்மாவையே நிகழ்ச்சியில் தவறாக பேசியிருக்கிறான் என்றும், கதவை திறந்து வைத்துக் கொண்டு நான் சிறுநீர் கழித்தேன் என்று சொல்கிறான். இப்படி செய்தவன் அனைத்து பெண்கள் முன்பு நிர்வாணமாக நின்று பார்த்துக்கோ எல்லாரும் என்ன லவ் பண்ணுங்க எப்படி சொல்லாமல் இருப்பான் என்று வனிதா கேள்வி எழுப்பி உள்ளார்.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?