பிக்பாஸ் கமல்ஹாசனுக்கு வனிதா விஜயகுமார் அளித்த ஆச்சரியப் பரிசு

7 November 2020, 7:35 pm
Quick Share

உலக நாயகன் கமல் ஹாசன் இன்று தனது 66வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் தலைவர்களும் திரையுலகினரும் ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இன்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் கலந்து கொள்ளவிருப்பதால் பிற நிகழ்ச்சிகளில் இன்று அவர் கலந்து கொள்ள வாய்ப்பில்லை என்றே தெரியவருகிறது.

இந்நிலையில் பிக் பாஸ் மூன்றாவது சீஸனில் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் வனிதா விஜயகுமார். அவர் நடிகர் கமல்ஹாசனது பிறந்தநாளை முன்னிட்டு ஒரு கேக் ஒன்றினை செய்துள்ளார். அதில் நம்மவர் எனும் வாசகத்தினை எழுதியுள்ளார்.

மேலும் மக்கள் நீதி மையத்தின் கட்சி கொடியினையும் கேக்கில் வைத்துள்ளார். கமல் சாரின் பிறந்தநாளுக்காக ஸ்பெஷலாக செய்தது என்ற வாக்கியங்கள் உடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார்.

இதற்கு ரசிகர்கள் பலரும் பாராட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Views: - 17

0

0