இதை மட்டும் செஞ்சிட்டீங்கனா நான் சினிமாவை விட்டே போயிடுறேன்- சவால் விடும் வனிதா விஜயகுமார்!
Author: Prasad18 July 2025, 4:42 pm
மிஸஸ் & மிஸ்டர்
ஜோவிகா விஜயகுமாரின் தயாரிப்பில் வனிதா விஜயகுமார் இயக்கி நடித்த “மிஸஸ் & மிஸ்டர்” திரைப்படம் கடந்த ஜூலை 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இத்திரைப்படத்தில் வனிதா விஜயகுமார், ராபர்ட் மாஸ்டர் ஆகியோர் ஜோடியாக நடித்துள்ளனர். கணவன் மனைவிக்கு இடையேயான உறவை மையமாக வைத்து இத்திரைப்படம் உருவாகியுள்ளது. எனினும் இத்திரைப்படத்திற்கு சுமாரான வரவேற்பே கிடைத்துள்ளது மேலும் இத்திரைப்படத்தின் சில காட்சிகள் பல திரைப்படங்களில் இருந்து காபியடிக்கப்பட்டதாகவும் விமர்சனங்கள் எழுந்தன.

நான் சினிமாவை விட்டே போய்டுறேன்…
இந்த நிலையில் இந்த விமர்சனம் குறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிலளித்துள்ளார் வனிதா. அதில், “நான் உங்களுக்கு சவால் விடுகிறேன். என்னுடைய படத்தை முதலில் பாருங்கள். அதன் பிறகு என்ன திட்டினாலும் நான் வாங்கிக்கொள்கிறேன். என் படத்தில் இருக்கும் எல்லா கன்டென்ட்டும் என் சொந்தமான ஒரிஜினல் கன்டென்ட் ஆகும். சில விமர்சகர்கள் சரியாக படத்தை பார்க்காமல் அறைகுறையாக படத்தை பற்றி விமர்சிக்கிறார்கள். என் படத்தில் இருந்த ஒரு காட்சியையாவது உங்களால் காபி என்று நிரூபித்துவிட முடியுமா? அப்படி நிரூபித்தால் நான் சினிமாவை விட்டே போய்விடுகிறேன்” என வனிதா விஜயகுமார் சவால் விடுத்துள்ளார்.
