44 வயதில் வனிதா விஜயகுமார் இப்படி ஒரு செயலா…படத்தின் டீசரை பார்த்து ரசிகர்கள் ஷாக்..!

Author: Selvan
18 January 2025, 2:07 pm

கிளாமரில் இறங்கிய வனிதா விஜயகுமார்

நடிகர் விஜயகுமார் மகளான வனிதா விஜயகுமார் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் பல வித சறுக்கல்களை சந்தித்து தற்போது தன்னுடைய மகள்களுடன் தனியாக வசித்து வருகிறார்.

இதையும் படியுங்க: மகனுக்காக ரவி மோகன் எடுத்த திடீர் முடிவு…ரசிகர்களுக்கு விரைவில் குட் நியூஸ்..!

பிக் பாஸ்,குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைத்த இவர் பல தனியார் சேனலுக்கு பேட்டிகள் அளித்து வந்தார்.இந்த நிலையில் தற்போது மீண்டும் வெள்ளித்திரையில் அடியெடுத்து வைத்துள்ளார்.

Mrs & Mr movie teaser

அந்த வகையில் தபோது மிசஸ் & மிஸ்டர்  என்ற படத்திற்கு கதை,வசனம் எழுதி தயாரித்து அதில் நடிக்கவும் செய்துள்ளார்.இதில் அவருக்கு ஜோடியாக ராபர்ட் மாஸ்டர் நடித்துள்ளார்.படத்தின் போஸ்டர் வெளியான போது இருவரும் விரைவில் திருமணம் செய்ய போகிறார்கள் என்ற வதந்தி பரவியது.அதன்பின்பு படத்தில் இருவரும் கணவன் மனைவியாக நடிக்க உள்ளனர் என்ற தகவல் வந்தது.இந்த நிலையில் படத்தின் டீஸர் நேற்று வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

படத்தில் வனிதாவுடன் சகிலா,பவார் ஸ்டார்,செஃப் தாமு என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.இதனால் படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் இப்படம் ஒரு காமெடி கலந்த ரொமான்டிக் படமாக இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

  • murali love actress sivaranjani but she did not accept him மது போதையில் அத்துமீறல்? திருமணம் ஆன பின்பும் நடிகையை காதலித்த முரளி! அடக்கொடுமையே?