Video : நீ வனிதான்னா, நான் நீலாம்பரிடி… வனிதா விஜயகுமார், ரம்யா கிருஷ்ணன் மோதல் !

14 July 2021, 10:00 pm
Quick Share

போன லாக்டவுன் காலத்தில் வனிதா விஜயகுமாரை சுத்தி சுத்தி வந்து கண்டென்ட் மெட்டீரியல் ஆக்கிக் கொண்டிருந்தார்கள். ஒரு வருடம் கழித்து மீண்டும் அவரை கண்டென்ட்டாக மாற்றி விட்டார்கள். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் இருந்து தான் விலகுவதாக அறிவித்து இருந்தார்.

எதனால் இந்த முடிவை எடுத்ததாக வனிதா கூறுகையில், “பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் ஏற்பட்ட கசப்பான அனுபவம் காரணமாக தான் இந்த முடிவை எடுத்துள்ளேன். பெண்களுக்கு ஆண்களால் மட்டுமில்லாமல் பெண்களாலும் கசப்பான அனுபவங்கள் ஏற்படுகிறது. பொறாமை காரணமாக நமக்கு வரும் வாய்ப்புகளை கெடுக்கிறார்கள். சீனியர் நடிகை இப்படி நடந்து கொள்வது அதிர்ச்சியாக உள்ளது என கூறினார்.

யார் அந்த சீனியர் என்று மக்கள் தேட, கமெண்ட்டுகளில் அந்த நிகழ்ச்சியின் நடுவர் ரம்யா கிருஷ்ணன் தான் காரணம் என்று கூறப்பட்டது. அதை நம்பும் வகையில் தற்போது BB ஜோடிகள் Promo ஒன்று வெளியாகி உள்ளது. அதில் வனிதா விஜயகுமார், ரம்யா கிருஷ்ணனும் வாக்குவாதம் செய்கிறார்கள். ஒரு கட்டத்தில் பொறுமை மிஞ்சிப் போய் வனிதா விஜயகுமார் சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து வெளியேறுகிறார். இதனை பார்த்த ரசிகர்கள், “நீ வனிதான்னா, நான் நீலாம்பரிடி…” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்

Views: - 1306

95

32