3 திருமணங்கள் செய்த வனிதாவிற்கு அந்த பிரச்சனை இருக்கா? அவரே வெளியிட்ட உண்மை!!

Author: Vignesh
5 May 2023, 10:30 am

பிரபல சினிமா பிரபலன்களான விஜயகுமார் – மஞ்சுளா தம்பதியின் மகள் தான் நடிகை வனிதா. இவரது திருமணங்கள், விவாகரத்து குறித்து அனைவரும் அறிந்ததே. பிக் பாஸுக்கு பிறகு தனியாக youtube சேனல் தொடங்கி நடத்தி வரும் இவர் சமையல், மேக்கப் உள்ளிட்ட பல விஷயங்கள் பற்றி வீடியோ வெளியிட்டு வருகிறார்.

vanitha_updatenews360

மேலும் சீரியல்கள், படங்கள் என நடிகையாகவும் தொடர்ந்த பிசியாக இருந்து வருகிறார். சமீப நாட்களாக, எந்தவித சண்டை சச்சரவுகளிலும் சிக்காமல் இருந்து வரும் வனிதா, சோசியல் மீடியாவில் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வருகிறார்.

இந்நிலையில், தற்போது சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில், நடிகை வனிதா விஜயகுமார் தனக்கு கிளாஸ்ட்ரோஃபோபியா நோய் இருப்பதாகவும், இது தன்னுடன் நெருக்கமாக இருக்கும் நபர்களுக்கு தெரியும் என்றும், சின்ன இடங்களில் தன்னால் இருக்க முடியாது எனவும், லிப்ட்டில் நீண்ட நேரம் இருக்க முடியாது என்றும், கழிப்பறையில் கூட அப்படி தான் என்றும், தான் பொது கழிப்பறைக்கு செல்லவே மாட்டேன் எனவும், தனக்கு அங்கே போகவே பயம் என்றும், இரண்டு நாள் வரை கூட கழிப்பறைக்கு போகமால் இருப்பேன் என தெரிவித்துள்ளார்.

vanitha - updatenews360

தான் கேரவனில் இருக்கும் கழிப்பறையை பயன்படுத்தவே மாட்டேன் என்றும், உடை மாற்றிவிட்டு உடனே அங்கிருந்து வந்துவிடுவேன் என்றும், பிக்பாஸில் கூட கிளாஸ்ட்ரோஃபோபியா சூழ்நிலை தான் எனவும், இதில் தாக்குப்பிடிக்கும் சந்தர்ப்பம் என்பது ஒருவருக்கு ஒருவர் மாறுப்படும் என தெரிவித்துள்ளார்.

vanitha-updatenews360-1

மேலும், தன் வாழ்க்கையும் அதே போல் தான் எனவும், தான் ஒரு இடத்தில் அடைக்கப்பட்டேன் என்றால் அங்கு இருக்கமாட்டேன் என அவர்கள் வேண்டாம் என்று சொல்லி வந்துவிடுவேன் என வேதனையுடன் வனிதா தெரிவித்துள்ளார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!