இது சிக்கனா.. காக்காவா..? KFC-யில் வனிதாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. வைரலாகும் போட்டோஸ்..!

Author: Rajesh
19 March 2023, 9:30 pm

பிரபல சினிமா பிரபலன்களான விஜயகுமார் – மஞ்சுளா தம்பதியின் மகள் தான் நடிகை வனிதா. இவரது திருமணங்கள், விவாகரத்து குறித்து அனைவரும் அறிந்ததே. பிக் பாஸுக்கு பிறகு தனியாக youtube சேனல் தொடங்கி நடத்தி வரும் இவர் சமையல், மேக்கப் உள்ளிட்ட பல விஷயங்கள் பற்றி வீடியோ வெளியிட்டு வருகிறார்.

vanitha_updatenews360

மேலும் சீரியல்கள், படங்கள் என நடிகையாகவும் தொடர்ந்த பிசியாக இருந்து வருகிறார். சமீப நாட்களாக, எந்தவித சண்டை சச்சரவுகளிலும் சிக்காமல் இருந்து வரும் வனிதா, சோசியல் மீடியாவில் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வருகிறார். இந்நிலையில், தற்போது பிரபல உணவு நிறுவனமான கே.எஃப்.சி-யில் ஆசையாய் சாப்பிட சென்று அப்செட் ஆனதாக வனிதா பதிவிட்டுள்ளார்.

ஐதராபாத் ராஜிவ் காந்தி விமான நிலையத்தில் உள்ள கே.எஃப்.சி-க்கு சாப்பிட சென்றபோது அங்கு தனக்கு தரப்பட்ட உணவு மிகவும் மோசமாக இருந்ததாக வனிதா புகார் தெரிவித்து புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

கஸ்டமர் சர்வீஸும் மோசமாக இருந்ததாகவும், தனக்கு கொடுக்கப்பட்ட சிக்கன் பீஸ் மிகவும் சின்னதாக இருந்ததாகவும், உலகத்தில் இதுபோன்ற சிறிய சிக்கனை பார்த்ததுண்டா, இது சிக்கனா அல்லது காக்காவா என கேள்வி எழுப்பி அந்த சிக்கனின் புகைப்படங்களையும் அந்த டீவீட்டில் பதிவிட்டுள்ளார் வனிதா. உங்களுக்கு இப்படி ஒரு அனுபவத்தை கொடுத்ததற்காக வருந்துகிறோம் என கே.எஃப்.சி-யும் ட்விட்டரில் வருத்தம் தெரிவித்துள்ளது.

  • producers not accept to produce ajith kumar 64th movie அஜித்குமாரின் கண்டிஷனை கேட்டு தெறித்து ஓடும் தயாரிப்பாளர்கள்? அப்படி என்னதான் சொல்றாரு!