14 ஆண்டு காதல்.. காதலரை கரம் பிடிக்கும் வரலட்சுமி.. மிகவும் சிம்பிளாக நடந்த நிச்சயதார்த்தம்..!

Author: Vignesh
2 March 2024, 7:20 pm

கோலிவுட்டில் முன்னனி நடிகையாக வலம் வரக்கூடிய நடிகை வரலக்‌ஷ்மி சரத்குமார் வித்தியாசமான கதாபாத்திரங்கள், கதைகளை தேர்ந்தெடுத்து தனது தொடர்ச்சியான வெற்றி மூலம் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார்.

இதனிடையே, தென்னிந்திய சினிமா துறையில் ஹீரோயினாக அறிமுகமாகி தற்போது நெகட்டிவ் ரோலில் நடித்து அசத்தி வரும் வரலட்சுமி சரத்குமார். இவர் முன்னதாக போடா போடி திரைப்படத்தில் STR-க்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானார்.

varalakshmi sarathkumar-updatenews360

இதன் பிறகு விஷால் உடன் காதல் இருந்ததாக தகவல் வெளியாகி அதுவும் முடிவுக்கு வந்தது. பின்னர் வெளியான ஒரு சில படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் ஒரு கட்டத்திற்கு மேல் நெகட்டிவ் கேரக்டரை ஏற்று நடித்து ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகிறார்.

கடந்த சில மாதங்களாகவே தமிழில் அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காததால் தெலுங்கு சினிமா பக்கம் கவனம் செலுத்த அங்கு வாய்ப்புகள் தொடர்ந்து கிடைத்த வண்ணம் உள்ளது. இதனால் அவர் ஹைதராபாத்திலே செட்டில் ஆகிவிட்டார்.

Varalaxmi Sarathkumar

இந்நிலையில், வரலட்சுமி சரத்குமாருக்கு மும்பையை சேர்ந்த தொழிலதிபரான நிக்கேலாய் சச்தேவ் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இவர்கள் இருவருக்கும் இடையே, கடந்த 14 ஆண்டுகள் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. தற்போது இவர்களின் பெற்றோர்கள் சம்மதத்துடன் மோதிரம் மாற்றிக்கொண்டு நிச்சயதார்த்தம் செய்துள்ளனர். தற்போது, இவர்களின் புகைப்படம் வைரலாக வருகிறது.

Varalaxmi Sarathkumar
Varalaxmi Sarathkumar
  • Superstar Rajinikanth's Upcoming Medical Trip to America ரஜினிகாந்துக்கு என்ன ஆச்சு? அமெரிக்கா புறப்படும் சூப்பர் ஸ்டார்..!!
  • Views: - 218

    0

    0