அப்பா மற்றும் சித்தியுடன் பொங்கல் கொண்டாடிய வரலக்ஷ்மி – அழகிய குடும்ப வீடியோ!
Author: Rajesh17 January 2024, 9:13 pm
கோலிவுட்டில் முன்னனி நடிகையாக வலம் வரக்கூடிய நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் வித்தியாசமான கதாபாத்திரங்கள், கதைகளை தேர்ந்தெடுத்து தனது தொடர்ச்சியான வெற்றி மூலம் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார்.
இதனிடையே, தென்னிந்திய சினிமா துறையில் ஹீரோயினாக அறிமுகமாகி தற்போது நெகட்டிவ் ரோலில் நடித்து அசத்தி வரும் வரலட்சுமி சரத்குமார். இவர் முன்னதாக போடா போடி திரைப்படத்தில் STR-க்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானார்.
இதன் பிறகு விஷால் உடன் காதல் இருந்ததாக தகவல் வெளியாகி அதுவும் முடிவுக்கு வந்தது. பின்னர் வெளியான ஒரு சில படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் ஒரு கட்டத்திற்கு மேல் நெகட்டிவ் கேரக்டரை ஏற்று நடித்து ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகிறார்.
இந்நிலையில் வரலக்ஷ்மி தனது அப்பா சரத்குமார் சித்தி ராதிகா மற்றும் ஒட்டுமொத்த குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடிய வீடியோவை வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார். இந்த அழகிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.