நச்சுன்னு ஒரு ‘இச்’கொடுத்த திரிஷா.. களைகட்டிய திருமண விழா..!

Author: Vignesh
2 July 2024, 7:54 pm

40 வயதுக்கு மேலாகியும் சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை திரிஷா தற்போது, டாப் நடிகர்களின் பட்டியலில் அடுத்தடுத்து நடித்தும் வருகிறார். பிஸியான ரெட்டியூலில் இருந்து வரும் த்ரிஷா குறித்து பல சர்ச்சைகளும் அவ்வப்போது வெளியாகிக் கொண்டுதான் உள்ளது. அதில், முக்கியமான ரூமர் செய்தியாக வெளியாகி வருவது விஜய், திரிஷா காதல் விவகாரம் தான். லியோ, படத்தில் இருவரும் இணைந்து நடித்தது முதல் ஷூட்டிங்கிற்காக இருவரும் ஜோடியாக சென்றது வரை லியோ படத்தில் முத்த காட்சி வரை பல விஷயங்களை த்ரிஷா, விஜய் குறித்து சமூக வலைதளங்களில் பேசு பொருளாக இருந்தது.

முன்னதாக, வரலட்சுமி இணையதளத்தில் ஆக்டிவாக இருந்து சில பதிவுகளை பகிர்ந்து வருகிறார். தற்போது, நிச்சயம் முடிந்த நிலையில், சில நாட்களாக மெகந்தி சங்கீத் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்களுக்கு சந்தித்து திருமண அழைப்பிதழ் கொடுத்து வந்தனர். சரத்குமார் குடும்பத்தினர் நேற்று நடைபெற்ற சங்கீத் நிகழ்ச்சியில், நடிகை திரிஷா கலந்துகொண்டு வரலட்சுமிக்கு நச்சென்று ஒரு முத்தம் கொடுத்திருக்கிறார். மேலும், நடிகர் ராதிகாவுடன் எடுத்த புகைப்படத்தையும் இணையதளத்தில் பகிர்ந்து வாழ்த்துக்களை த்ரிஷா தெரிவித்துள்ளார்.

  • yogi babu explains about not attended gajaana audio release function பொய் பொய்யா பேசாதீங்க- தரக்குறைவாக பேசிய தயாரிப்பாளருக்கு யோகி பாபு பதிலடி!