என்ன பாட்டு அது.. மோசமான வரிகள்: சின்னப் பசங்க மனசு நஞ்சாக்கிடும்.. விவேக்குக்கு எதிராக விஜய் ரசிகர்கள் கொந்தளிப்பு..!

Author: Vignesh
10 November 2022, 6:30 pm
vijay ranjitha me - updatenews360
Quick Share

வாரிசு படத்தின் ரஞ்சிதமே பாடலின் வரிக்கு தற்போது எதிர்ப்பு கிளம்பி இருக்கும் தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், பாக்ஸ் ஆபிஸிலும் இடமும் பெற்று இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் விஜய் அவர்கள் நெல்சன் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ என்ற படத்தில் நடித்து இருந்தார்.

beast-updatenews360-1-6

இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. பல எதிர்பார்ப்புடன் வெளிவந்த பீஸ்ட் படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. அதோடு பெரிய அளவிலும் இந்த படம் வசூல் செய்யவில்லை என்று கூறப்பட்டது. தற்போது இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் வாரிசு என்ற படத்தில் விஜய் நடிக்கிறார். வம்சி தெலுங்கு சினிமா உலகில் முன்னணி இயக்குனர் ஆவார். இந்த படத்தை தில் ராஜு தயாரிக்கிறார்.

வாரிசு படம்:

vijayvarisu-updatenews360

இயக்குனர் வம்சி- தயாரிப்பாளர் தில் ராஜு ஆகிய இருவரும் இணைந்து பல படங்களில் பணியாற்றி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், வாரிசு படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இந்த படத்தில் சரத்குமார், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், நாசர், பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு என்று பலர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு தமன் இசையமைகிறார்.

ரஞ்சிதமே பாடல் :

vijay ranjitha me - updatenews360

தற்போது படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. மேலும், ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை இந்த படம் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. சமீபத்தில் தான் இந்த படத்தின் முதல் பாடலான ரஞ்சிதமே என்று துவங்கும் பாடல் வெளியாகி இருக்கிறது. இந்த பாடலை விஜய் பாடியிருக்கிறார்.

பாடல் குறித்த கிண்டல்:

இந்த பாடல் வெளியானதில் இருந்தே ரசிகர்கள் அதிருப்தி அடைந்து விட்டார்கள் என்று சொல்லலாம். பாடல் வரிகளும் சரியில்லை, விஜயின் நடன ஸ்டெப்புகள் ஒன்று கூட நன்றாக இல்லை என்றெல்லாம் கேலிக் உள்ளாகி இருக்கிறது. இந்த நிலையில் பாடல் வரி குறித்த சர்ச்சை சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, ரஞ்சிதமே பாடலில் உச்சி கொட்டும் நேரத்தில் உச்சகட்டம் தொட்டவளே என்ற வரி வரும்.

vijay ranjitha me - updatenews360

பாடல் வரி குறித்த சர்ச்சை:

இது ஒரு மோசமான வரி. இந்த மாதிரி மோசமான அர்த்தம் கொண்ட வரியை விஜய் எப்படி பாடியிருக்கிறார்? விஜய்க்கு ஏகப்பட்ட சிறுவர்கள் ரசிகர்களாக இருக்கிறார்கள். அந்த வகையில் சிறுவர்களும் இந்த பாடலுக்கு அர்த்தம் புரியாமல் பாடுவார்கள். விஜய் உடைய படங்களுக்கு இனி விவேக் பாடல் எழுதக்கூடாது என்றெல்லாம் கூறி வருகிறார்கள்.

Views: - 1073

5

1