விசிக எம்எல்ஏ கொடுத்த புகார்? அனிருத் இசை நிகழ்ச்சிக்கு தடை? அதிர்ச்சியில் ரசிகர்கள்…
Author: Prasad22 August 2025, 12:22 pm
கல்லா கட்டும் இசை கச்சேரி
அனிருத்தின் இசை எந்தளவுக்கு வரவேற்பு பெற்றிருக்கிறதோ அதே அளவிற்கு அவரது இசை கச்சேரிக்கும் வரவேற்பு அதிகம். அந்த வகையில் அவரது இசை கச்சேரிக்கும் ரசிகர்களின் கூட்டம் அலைமோதுவது வழக்கம். இந்த நிலையில் நாளை சென்னைக்கு அருகே உள்ள கூவத்தூரில் அனிருத்தின் இசை கச்சேரி நடைபெறவுள்ளது. இந்த நிலையில்தான் செய்யூர் தொகுதி எம்எல்ஏவான பனையூர் பாபு அனிருத்தின் இசை கச்சேரியை தடை செய்ய வேண்டும் என நீதிபதியிடம் முறையிட்டுள்ளார்.

என்ன புகார்?
மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெறாமல் அனிருத்தின் இசை கச்சேரி நடைபெறவுள்ளது எனவும் இந்த இசை கச்சேரியை தடை செய்ய வேண்டும் எனவும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு எம்எல்ஏ பனையூர் பாபு தரப்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இது இன்று மதியம் 2.30 மணியளவில் விசாரணைக்கு வருகிறது. இதன் பிறகுதான் அனிருத்தின் இசை கச்சேரி தடையில்லாமல் நடக்குமா என தெரியவரும்.
