வீரம் பட குட்டி யுவினாவா ஞாபகம் இருக்கா.. நெடுநெடுவென வளர்ந்து ஹீரோயின் போல் மாறிட்டாங்களே..!

Author: Vignesh
30 June 2023, 10:30 am

சினிமாவில் குழந்தை நட்சத்திரங்களாக அறிமுகமாகி அதன் பின் இளம் நடிகைகளுக்கு இணையாக மாறிவரும் குழந்தை நட்சத்திரங்கள் தற்போது அதிகரித்து வருகின்றனர்.

முன்னதாக அனிகா, எஸ்தர் அனில், ரவீனா தாகாவை தொடர்ந்து பிரபலமாகி வருபவர் தான் குட்டி பெண் யுவினா பர்தாவி. இவர் அஜித் குமார் நடிப்பில் வெளியான மிகப்பெரும் வெற்றி அடைந்த வீரம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.

Yuvina Parthavi-updatenews360

இந்த படத்தில், கயல்விழி என்ற கதாபாத்திரத்தில் இவர் தமன்னா அஜித்துடன் இணைந்து கியூட்டாக நடித்திருப்பார். இந்த படத்தினை தொடர்ந்து மேகா, கத்தி, அரண்மனை, காக்கி சட்டை, ஸ்ட்ராபெர்ரி, மம்மி, சர்க்கார் உள்ளிட்ட பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.

Yuvina Parthavi-updatenews360

மேலும், அவரது அம்மாவுடன் இணைந்து விளம்பரங்களிலும் நடித்து வருகிறார். குட்டி குழந்தையாக இருந்த யுவினா தற்போது வயது பெண்ணாக மாறி மாடன் உடையில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். இதனை பார்த்தவர்கள் தற்போது வைரல் ஆக்கி வருகின்றனர்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?