ஜெய்யின் ‘வீரபாண்டியபுரம்’ – சினிமாவில் வன்முறை மாவட்டமாக மதுரை சித்தரிக்கப்படுகிறதா.?

Author: Rajesh
8 February 2022, 2:16 pm
Quick Share

இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், ஜெய்யின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் வீரபாண்யபுரம். இந்தப் படத்தில் ஜெயப்பிரகாஷ், பாலசரவணன், காளி வெங்கட் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். நடிகர் ஜெய். ‘சுப்ரமணியபுரம்’ படத்திற்குப் பிறகு அதே கெட்டப்புடன் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்தப் படத்தின் ட்ரெயிலரை நடிகர்கள் சிம்பு, விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால், ஆர்யா உள்ளிட்ட 10 பிரபலங்கள் சமூகவலைத்தளத்தில் பகிர்ந்து வெளியிட்டு இருந்தனர்.

இந்நிலையில் இந்தப் படத்திற்கு யு/ஏ சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்தப் படம், திரையரங்குகளில், வரும் பிப்ரவரி 18-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிரடி ஆக்ஷன் நிறைந்த காட்சிகள் அதிகம் இருப்பது போன்று இப்படத்தின் கதை இருப்பதாக கூறப்படுகிறது. இதனை பார்த்த மதுரைச் சேர்ந்த சமுக ஆர்வலர்கள் பலரும் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். சினிமாத்துறையினருக்கு வன்முறை என்றால் மதுரைதானா? ஏன் இது போன்ற ரத்தங்கள் தெறிப்பது போன்ற, காட்சிகள் அனைத்து மதுரையில் நடப்பது போன்று ஏன் சினிமாவில் காட்டப்படுகிறது.

மதுரையில் காதல், அன்பு என அனைத்து இருக்கிறது. இதுபோன்ற படங்கள் எடுப்பதனால் தான் என்னவோ மதுரை சற்று பின்தங்கிய மாவட்டமாகவே இருந்து வருகிறது என்று தங்கள் வருத்தங்களை தெரிவித்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் பல படங்களில் வன்முறை காட்சிகள் அதிகம் இருக்கும் என்றால் அந்த கதை மதுரையைச் சுற்றியே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 1351

0

1