வேல்ஸ் நிறுவனத்திற்காக படம் இயக்கும் 10 இயக்குனர்கள்! சர்ப்ரைஸ் வீடியோவை வெளியிட்ட ஐசரி கணேஷ்…

Author: Prasad
27 June 2025, 12:24 pm

ஐசரி கணேஷ் 

வேல்ஸ் கல்வி குழுமத்தின் நிறுவனரான ஐசரி கணேஷ் 2016 ஆம் ஆண்டு “தேவி” திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தார். தனது வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் என்ற நிறுவனத்தின் மூலம் “தேவி” திரைப்படத்தை தொடர்ந்து தமிழில் பல வெற்றித் திரைப்படங்களை தயாரித்து வருகிறார் ஐசரி கணேஷ்.

தற்போது “ஜீனி”, “மூக்குத்தி அம்மன் 2” போன்ற திரைப்படங்களை தயாரித்து வரும் ஐசரி கணேஷ், அடுத்ததாக தான் தயாரிக்கவுள்ள 10 திரைப்படங்களின் இயக்குனர்களை அட்டகாசமான வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளார். 

vels films international company founder ishari ganesh announced his upcoming project directors

யார் யார் அந்த இயக்குனர்கள்?

 “டாடா”, “கராத்தே பாபு” ஆகிய திரைப்படங்களின் இயக்குனர் கணேஷ் கே பாபு வேல்ஸ் நிறுவனத்திற்காக ஒரு புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக “சிலுக்குவார் பட்டி சிங்கம்”, “கட்டா குஸ்தி” ஆகிய திரைப்படங்களை இயக்கிய செல்லா அய்யாவு வேல்ஸ் நிறுவனத்திற்கு ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளார்.

மேலும் “போர் தொழில்” இயக்குனர் விக்னேஷ் ராஜா வேல்ஸ் நிறுவனத்திற்கு ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளார். அதனை தொடர்ந்து, “கனா”, “நெஞ்சுக்கு நீதி” ஆகிய திரைப்படங்களை இயக்கிய அருண்ராஜா காமராஜ் ஒரு திரைப்படத்தை வேல்ஸ் நிறுவனத்திற்காக இயக்கவுள்ளார். 

மலையாளத்தில் “2018” என்ற வெற்றித் திரைப்படத்தை இயக்கிய ஜூட் ஆந்தனி ஜோசஃப் வேல்ஸ் நிறுவனத்திற்காக ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளார். அதே போல் “96”, “மெய்யழகன்” ஆகிய திரைப்படங்களை இயக்கிய பிரேம் குமாரும் அந்நிறுவனத்திற்கு ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளார். இது “96 பார்ட் 2” ஆக இருக்க வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனை தொடர்ந்து, “பரியேறும் பெருமாள்”, “கர்ணன்”, “மாமன்னன்”, “வாழை” ஆகிய திரைப்படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் வேல்ஸ் நிறுவனத்திற்கு ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளார். இவரை தொடர்ந்து “வடசென்னை”, “அசுரன்”, “விடுதலை” போன்ற தனித்துவமான திரைப்படங்களை இயக்கிய வெற்றிமாறனும் இந்நிறுவனத்திற்கு ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளார்.

“விண்ணைத்தாண்டி வருவாயா”, “நீதானே என் பொன் வசந்தம்”, “வெந்து தணிந்தது காடு” போன்ற திரைப்படங்களை இயக்கிய கௌதம் வாசுதேவ் மேனன் வேல்ஸ் நிறுவனத்திற்காக ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளார். இதனை தொடர்ந்து தமிழின் முன்னணி கமெர்சியல் இயக்குனர் சுந்தர் சி ஓரு புதிய திரைப்படத்தை வேல்ஸ் நிறுவனத்திற்காக இயக்கவுள்ளார். 

இதுவரை அறிவிக்கப்பட்ட இயக்குனர்கள் அனைவரும் 2025 ஆம் ஆண்டில் இருந்து 2027 ஆம் ஆண்டு வரைக்குமான வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கப்போகும் திரைப்படங்களின் இயக்குனர்கள் எனவும் ஐசரி கணேஷ் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!