அமலாக்கத்துறை ரெயிடால் வெங்கட் பிரபுவுக்கு அடித்த ஜாக்பாட்? துன்பத்திலும் ஒரு இன்பம்…
Author: Prasad24 May 2025, 5:46 pm
தலைமறைவான தயாரிப்பாளர்?
டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் ரூ.1000 கோடி முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதனை தொடர்ந்து அமலாக்கத்துறை திமுகவுக்கு நெருக்கமான பல முக்கிய புள்ளிகளின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை செய்தது. இதில் ஆகாஷ் பாஸ்கரனின் வீடும் அடங்கும்.
ஆகாஷ் பாஸ்கரன் தனுஷை வைத்து “இட்லி கடை”, சிவகார்த்திகேயனை வைத்து “பராசக்தி”, சிம்புவை வைத்து “STR 49” போன்ற திரைப்படங்களை தயாரித்து வருகிறார். இதனிடையேதான் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை அவரது வீட்டில் சோதனை நடத்தியது. இதில் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக பல ஆவணங்களை அமலாக்கத்துறை கைப்பற்றியதாக கூறப்படுகிறது.

மேலும் தனுஷ், சிவகார்த்திகேயன், சிம்பு ஆகியோருக்கு பல கோடி ரூபாய் ரொக்கமாக தந்ததற்கான ஆவணங்களையும் அமலாக்கத்துறை கைப்பற்றியுள்ளதால் தனுஷ், சிவகார்த்திகேயன், சிம்பு ஆகியோருக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்ப வாய்ப்புள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் சோதனை நடத்திய நிலையில் அமலாக்கத்துறை அவரை ஆஜர் ஆகும்படி சம்மன் அனுப்பியது. ஆனால் ஆகாஷ் பாஸ்கரன் தற்போது தலைமறைவாகியுள்ளதாக சில தகவல்கள் கூறுகின்றன. இந்த அதிரடி சோதனையினால் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்து வரும் “இட்லி கடை”, “பராசக்தி”, “STR 49” ஆகிய திரைப்படங்களின் படப்பிடிப்பிற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
வெங்கட் பிரபுவுக்கு அடித்த ஜாக்பாட்?
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஒரு திரைப்படத்தில் நடிப்பதாக ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் “மதராஸி”, “பராசக்தி” ஆகிய திரைப்படங்களில் சிவகார்த்திகேயன் பிசியாக இருந்ததால் வெங்கட் பிரபுவின் பிராஜெக்ட் தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. இதனால் வெங்கட் பிரபுவும் சற்று வருத்தத்தில் இருப்பதாகவும் கூறப்பட்டது.
அந்த வகையில் தற்போது அமலாக்கத்துறையின் அதிரடி சோதனையால் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பிற்கு சற்று சிக்கல் ஏற்பட்டுள்ளதால் சிவகார்த்திகேயன் வெங்கட் பிரபுவை அழைத்து “சீக்கிரம் முழு ஸ்கிரிப்ட்டையும் தயார் செய்யுங்கள், விரைவில் ஷூட்டிங் போகலாம்” என கூறியுள்ளராம். ஆதலால் மிக விரைவிலேயே வெங்கட் பிரபு-சிவகார்த்திகேயன் பிராஜெக்ட் டேக் ஆஃப் ஆக வாய்ப்புள்ளதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது.