சிவாங்கிக்கு சர்டிபிகேட் கொடுக்க நீ யாரு… கொந்தளிக்கும் குக் வித் கோமாளி பிரபலம் ..!

Author: Vignesh
15 August 2023, 11:00 am

குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. சிவாங்கி இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர். ஆனால், இவர் இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பே சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி முலம் விஜய் டிவியில் பல ஆண்டுகாலமாக இருந்து வருகிறார்.

Sivaangi-updatenews360-2

இவர் பிரபல பின்னனி பாடகியான பின்னி கிருஷ்ணகுமாரின் மகள் ஆவார். ஷிவாங்கி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டாலும் அந்த நிகழ்ச்சியில் பாதியிலேயே எலிமினேட் ஆகி வெளியேறி இருந்தார். இருந்தாலும், இவருக்கு பெரும் புகழை ஏற்படுத்தி கொடுத்தது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான்.

Sivaangi-updatenews360-2

இந்நிலையில், இம்முறை மைம் கோபி டைட்டில் வென்றார். பலரும் சிவாங்கிக்கு சாதகமாக தொலைக்காட்சி செயல்பட்டு வருவதாகவும், அதனால் தான் பைனல் வரை சிவாங்கி சென்றார் என்று கருத்துக்களை தெரிவித்து வந்தனர். ஆனால், சமீபத்தில் பேட்டி அளித்த வெங்கடேஷ் பட் ஒரு திறமையானவரை இது போன்ற கமெண்ட் எவ்வளவு கீழ்ப்படுத்துகிறது, அவள் மிக திறமையானவர். வீட்டில் உட்கார்ந்து போனை நோண்டிக்கொண்டு கமெண்ட் அடிப்பவர்கள் என்ன சாதித்து விட்டீர்கள். சிவாங்கி பற்றி பேச உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது என கொந்தளித்து விட்டார்.

venkatesh bhat-updatenews360
  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!