கைவிடப்பட்ட வாடிவாசல்? சூர்யாவுக்கு டாட்டா காண்பித்து வேறு நடிகருக்குத் தாவிய வெற்றிமாறன்?
Author: Prasad6 June 2025, 11:35 am
வெற்றிமாறன்-சூர்யா கூட்டணி
வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் “வாடிவாசல்” திரைப்படம் தொடங்கப்பட உள்ளதாக மூன்று வருடங்களுக்கு முன்பே அறிவிப்பு வெளிவந்தது. இதற்காக சூர்யா பிரத்யேகமாக ஒரு காளை மாட்டுடன் பயிற்சி எடுத்துக்கொண்டு வந்ததாகவும் கூறப்பட்டது. “விடுதலை பார்ட் 2” திரைப்படத்திற்குப் பிறகு “வாடிவாசல்” திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்தனர்.
இதனிடையே ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறவைக்கும் விதமாக வெற்றிமாறன், சூர்யா ஆகியோருடன் இணைந்து தான் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தை “அகிலம் ஆராதிக்க வாடிவாசல் திறக்கிறது” என்ற கேப்ஷனுடன் வெளியிட்டிருந்தார் கலைப்புலி எஸ் தாணு. இப்புகைப்படம் ரசிகர்கள் பலரது ஆர்வத்தையும் தூண்டியது. மிக விரைவிலேயே “வாடிவாசல்” திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

கைவிடப்பட்ட வாடிவாசல்?
இந்த நிலையில் தற்போது சூர்யா ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுக்கும் வகையில் ஒரு தகவல் வெளிவந்துள்ளது. அதாவது வெற்றிமாறன் சிலம்பரசனை வைத்து ஒரு புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளாராம். இத்திரைப்படத்தை கலைப்புலி எஸ் தாணுவே தயாரிக்கிறாராம். இதனால் “வாடிவாசல்” திரைப்படம் கைவிடப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது.
“கங்குவா” திரைப்படத்திற்குப் பிறகு சூர்யா “வாடிவாசல்” திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் ஒரு திரைப்படத்திலும் வெங்கி அட்லூரி இயக்கத்தில் ஒரு திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில்தான் “வாடிவாசல்” திரைப்படம் டிராப் ஆகிவிட்டதாக கூறப்படுகிறது.
