அஜித்தை பார்த்து முதலில் வியந்தேன்…மகிழ்திருமேனி பகிர்ந்த சுவாரசிய தகவல்…!

Author: Selvan
27 January 2025, 3:31 pm

இந்த வருடம் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள இரண்டு படங்கள் திரைக்கு வர உள்ளன.அந்த வகையில் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படம் வரும் பிப்ரவரி 6-ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

முன்னதாக இப்படம் பொங்கல் அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சில பல காரணங்களால் தள்ளி போனது.இப்படத்தில் அஜித்துடன் திரிஷா,அர்ஜுன் ரெஜினா,ஆரவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.அனிருத் இசையில் லைக்கா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

இந்த நிலையில் நடிகர் அஜித்தை பற்றி இயக்குனர் மகிழ் திருமேனி சமீபத்திய பேட்டி ஒன்றில் புகழ்ந்து பேசியுள்ளார்.அதில் அஜித் சாரிடம் நான் முதன்முதலில் பார்த்து வியந்தது அவருடைய அர்ப்பணிப்பு தான்,நடிகர் மற்றும் ரேஸராக தான் நமக்கு அவரை தெரியும்,ஆனால் அதையும் தாண்டி பல விசயங்களை பார்த்து நான் வியந்துபோனேன்,அவர் ஒரு சிறந்த புகைப்பட கலைஞர்,அவர் எடுத்த சில புகைப்படங்கள் சர்வேதேச அளவில் பரிசுகளை வென்றுள்ளது,மேலும் அவர் துப்பாக்கி சுடுவதிலும் கில்லாடி என கூறியிருப்பார்.

அதுமட்டுமில்லாமல் கார் ரேஸில் குறிகிய நாட்களை பயிற்சி பெற்று பரிசு வாங்கினார்,எந்த ஒரு செயலை கொடுத்தாலும் முழு மனதோடும் அன்போடும் பண்ணுவதால்,அவர் தொடர்ந்து பல துறைகளில் வெற்றி வாகை சூடி வருகிறார் என மகிழ் திருமேனி தெரிவித்துள்ளார்.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?