விடாது கருப்போட காப்பியா? சூர்யா நடிக்கும் படத்தின் டைட்டிலால் எழுந்த சந்தேகம்?

Author: Prasad
9 May 2025, 6:49 pm

90ஸ் கிட்ஸை கதிகலங்கவைத்த தொடர்

1990களின் பிற்பகுதியில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “விடாது கருப்பு” தொடரை 90ஸ் கிட்ஸால் மறந்திருக்க முடியாது. மிகவும் திகில் கிளப்பும் அத்தொடர் 90ஸ் கிட்ஸ்களை கதிகலங்க வைத்தது என்றுதான் சொல்ல வேண்டும். மேலும் அக்காலகட்டத்தில் மிகவும் வித்தியாசமான தொடராகவும் இது இருந்தது. 

vidaathu karuppu serial copy is suriya 45

இந்த நிலையில் சூர்யாவின் புதிய திரைப்படத்திற்கு இதே மாதிரியான டைட்டிலை வைத்துள்ளார்கள். 

சூர்யா 45

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா நடித்து வருகிறார். மேலும் இவர்களுடன் ஷிவதா, சுவாஸிகா, யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். இத்திரைப்படத்திற்கு சாய் அப்யங்கர் இசையமைத்து வரும் நிலையில் டிரீம் வாரியர் பிக்சர்ஸ் இத்திரைப்படத்தை தயாரித்து வருகிறது. 

vidaathu karuppu serial copy is suriya 45

இந்த நிலையில் இத்திரைப்படத்தின் டைட்டில் குறித்தான ஒரு அரிய தகவல் வெளிவந்துள்ளது. அதாவது இத்திரைப்படத்திற்கு “வேட்டை கருப்பு” என்று பெயர் வைத்துள்ளார்களாம். இத்திரைப்படத்தின் அறிவிப்பு போஸ்டர் வெளிவந்தபோதே இது “விடாது கருப்பு” தொடரை போல கருப்பசாமி என்ற தெய்வத்தின் கதையை மையமாக வைத்து எழுதப்பட்ட கதையம்சத்தில் உருவாகி வரும் திரைப்படம் என்று கூறப்பட்டது. மேலும் இத்திரைப்படத்தில் சூர்யா கருப்பசாமியாக வருவதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில்தான் இத்திரைப்படத்திற்கு “வேட்டை கருப்பு” என்று பெயர் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. 

  • vismaya mohanlal introduce as a heroine in thudakkam movie சினிமாவிற்குள் நுழையும் மோகலாலின் இரண்டாவது வாரிசு? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!