அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!

Author: Selvan
22 December 2024, 8:26 pm

விடாமுயற்சி படத்தின் இறுதி கட்ட அப்டேட்

மகிழ் திருமணி இயக்கத்தில் உருவாகியிருக்கும் அஜித்தின் 62 வது படமான விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு,இன்றுடன் வெற்றிகரமாக முடிவடைந்தது விட்டது என படக்குழு தெரிவித்துள்ளது.

Vidamuyarchi Pongal release news

அஜித்,திரிஷா,அர்ஜுன்,பிரியா பவானி சங்கர்,vj ரம்யா என பலர் நடிப்பில் உருவாகியுள்ள விடாமுயற்சி திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது.இப்படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளார்.

இதையும் படியுங்க: வாடிவாசலை விட்டு வெளியேறிய சூர்யா..வெற்றிமாறன் கொடுத்த அப்டேட்…!

சமீப காலமாக விடாமுயற்சி படத்தின் குறித்த அப்டேட் சமூக வலைத்தளங்களில் வந்து கொண்டே இருந்ததால்,அஜித் ரசிகர்கள் உற்சாக வெள்ளத்தில் இருந்தனர்.இப்படம் வரும் பொங்கல் அன்று வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில்,தற்போது படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் முடிந்து விட்டது என அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள்.

அதிலும் குறிப்பாக இயக்குனர் மகிழ் திருமேனி நடிகர் அஜித்துக்கு நன்றி கூறி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் “சார் உங்கள் மீது அளவற்ற மரியாதையும்,அன்பும் உள்ளது,நீங்கள் எங்களுக்கு ஒரு முன்னூதாரணமாக இருந்தீங்க..நீங்கள் மிகவும் சாதாரணமாகவும்,எளிமையாகவும் எங்க கூட நடந்து கொண்டீங்க,அது எங்களுடைய ஒட்டுமொத்த குழுவிற்கும் ஒரு ஊக்கத்தை ஏற்படுத்தியது.மேலும் தனிப்பட்ட முறையில் உங்கள் அன்புக்கும்,அக்கறைக்கும் நன்றிகள் சார் என தெரிவித்துள்ளார்.

இந்த பதிவால் அஜித் ரசிகர்கள் இந்த பொங்கல் நம்ம விடாமுயற்சி பொங்கல் என கருத்துக்களை தெறிக்கவிட்டு வருகின்றனர்.

  • savukku shankar said that red giant movies company plan to flop jana nayagan movie ஜனநாயகன் படத்தின் சோலியை முடிக்க ரெட் ஜெயண்ட் போட்ட பக்கா  பிளான்? பிரபலம் ஓபன் டாக்…